என் மலர்
நீங்கள் தேடியது "He came to the ATM center missing the money."
- போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபர்
- நேர்மையை பாராட்டி எஸ்.பி. வாழ்த்து தெரிவித்தார்
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மொர்ச பள்ளியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் நந்தகுமார்.
இவர் நேற்று பேரணாம்பட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் அருகே ரூ. 10 ஆயிரம் கீழே கிடந்தது.
இதனை கண்ட நந்தகுமார் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பணத்தை தவறவிட்டவர்கள் யார் என விசாரணை நடத்தினர். அப்போது பணத்தை தவறவிட்ட விஜய் என்பவர் ஏடிஎம் மையத்திற்கு வந்தார். விஜய் ஏடிஎம் மையத்தின் கீழே கிடந்த பணத்திற்கு உண்டான ஆவணங்களை காண்பித்ததால் அவரிடம் ரூ. 10 ஆயிரத்தை திருப்பி தரப்பட்டது. இது குறித்து அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நந்தகுமாரின் நேர்மையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.






