என் மலர்
நீங்கள் தேடியது "Thousands of passengers come and go"
- புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஏடிஎம் மையம் இல்லை
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றங்கரையோரம் 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ 53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர், குடியாத்தம், ஆம்பூர், பேரணாம்பட்டு, ஓசூர் பல்வேறு ஊர்கள், மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது
அதேபோல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டா கடைகள் கட்டப்பட்டு உள்ளன.
ஆனால் ஏடிஎம் மையம் அமைக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஏடிஎம் மையம் இல்லாததால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிபடுகின்றனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் நேஷனல் தியேட்டர் சர்க்கிள் அல்லது காட்பாடி சில்க் மில் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே புதிய பஸ் நிலையத்தில் ஏடிஎம் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






