என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தாய்-மகன் இருவரும் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 61), கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசனும், அவரின் தாய் வள்ளியம்மாளும் (81) உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

    அங்கு, இருவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு, தீவிர சிகிச்சைக்கு பின் தொற்றில் இருந்து குணமாகி 10 நாட்களுக்கு முன்பு தாயும், மகனும் வீடு திரும்பினர்.

    நேற்று முன்தினம் இரவு திடீரென கணேசன் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததைப் பார்த்த வள்ளியம்மாளும் அதிர்ச்சியடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த தகவலை கேட்டு அவரின் வீட்டில் அப்பகுதி மக்கள் திரண்டனர். அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. தாய், மகன் கொரோனா பாதித்தவர்கள் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
    கொரோனா பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் சரிவர உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தற்போது கொரோனா வார்டாக தயார் நிலையில் உள்ளதை மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    80 அறைகளில் தலா அறைக்கு 3 படுக்கை உள்ளிட்ட 240 படுக்கைகள், கொரோனா பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் சரிவர உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த பொறியியல் கல்லூரியில் ஆரணி சுற்றியுள்ள கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் இந்த இடத்தில் தங்கி தரமான சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்தார்.

    இதில் ஆரணி உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன் உதவி பொறியாளர்கள் ஜெயலட்சுமிராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 662 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 662 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று 238 பேர் குணமடைந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இதுவரை 328 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
    ஆரணி அருகே கொரோனா தொற்றால் கணவன்-மனைவி பலியாகினர். இதனால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
    ஆரணி:

    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வேகமாகப் பரவி வருகிறது. ஆரணியை அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் அய்யர் (வயது 75) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலப் பாதிப்பால் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் அய்யர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை மகள்கள் மற்றும் மருமகன்கள் ஆகியோர் சுகாதாரத் துறையினர் மூலமாக சென்னையிலேயே தகனம் செய்தனர்.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் பலியான ராதாகிருஷ்ணன் அய்யரின் மனைவி சுந்தரிக்கும் (65) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும், சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணவர் உயிரிழந்த தகவலை குடும்பத்தினர் சுந்தரியிடம் தெரிவிக்காமல் இருந்தனர்.

    எனினும், கணவர் பலியான தகவல் தெரியாமலேயே சுந்தரியும் கணவர் உயிரிழந்த 2 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார். அவரின் உடல் சென்னையிலேயே தகனம் செய்யப்பட்டது. இருவரின் உடல்கள் சொந்த கிராமத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இதனால் கிராம மக்களும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
    கண்ணமங்கலம் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில்,சந்தவாசல் வனச்சரகர் பி.செந்தில்குமார் ஆலோசனைப்படி, சந்தவாசல் பிரிவு வனவர் பி.ஏழுமலை மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை படவேடு பீட், கோட்டை மலை வழி சரகத்தில் ரோந்து சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் லாரி டியூபில் 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்த படவேடு வேட்டகிரிபாளையம் சுப்பிரமணியன் மகன் ரவி (வயது22) என்பவரை கைது செய்து போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போளூரில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் டைவர்ஷன் ரோட்டில் வசித்து வருபவர் டாக்டர் சிவநேசன் (வயது 77). இவர், அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனது வீட்டில் ஒரு பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். நேற்று முன்தினம் காலை டாக்டர் வீட்டில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை வேலைக்காரர் அணைக்க வந்தார். அப்போது வீட்டின் மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி உடனே டாக்டருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து டாக்டர் சிவநேசன் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.60 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து டாக்டர் போளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றார். திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கண்ணமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. அவரது மகன் சரவணன் (வயது 30), டிப்ளமோ படித்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள உறவினர் சேகர் என்பவரது வீட்டில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தூசி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரின் மகன் மேகநாதன், சுவீட் கடையில் இனிப்பு மற்றும் கார வகைகள் செய்யும் தொழிலாளி. அவர் தற்போது காஞ்சீபுரத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், மனைவி கீதாஞ்சலிக்கும் இடைேய குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மேகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரின் தந்தை வரதராஜன் தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தண்டராம்பட்டு அருகே தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள வீராணம் ஊராட்சிக்குட்பட்ட கொரட்டாம்பாளையம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 1977- ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. ஏற்கனவே பள்ளி இருந்த இடத்தில் உள்ள 10 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தில் குடிநீர் தேக்க தொட்டி மற்றும் பால் சொசைட்டி ஆகியவை இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் அந்த இடத்திற்கு அருகில் உள்ள தனி நபர் ஒருவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். இதனை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் சார்பில் பலமுறை கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் நேற்று காலை அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், ஊராட்சி செயலாளர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

      செங்கம்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    மு.பெ.கிரி திமுக108081
    எம்.எஸ்.நைனாகண்ணுஅதிமுக96511
    எஸ்.அன்புதேமுதிக2769
    எஸ்.சுகன்ராஜ்இஜக828
    சீ.வெண்ணிலாநாம் தமிழர்12080
     திருவண்ணாமலை
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    எ.வ.வேலு திமுக137876
    சீ.தணிகைவேல் பா.ஜ.க43203
    ஏ.ஜி. பஞ்சாட்சரம் அ.ம.மு.க.2108
    இரா.அருள்  ம.நீ.ம.6246
    ஜெ.கமலக்கண்ணன் நாம் தமிழர்13995
     கீழ்பெண்ணாத்தூர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    கு.பிச்சாண்டிதிமுக104675
    கா.செல்வகுமார்  பாமக77888
    கார்த்திகேயன்அமமுக2191
    சுகானந்தன்ம.நீ.ம.1437
    டாக்டர் ரமேஷ் பாபு நாம் தமிழர்11541
     கலசப்பாக்கம்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    சரவணன்திமுக94134
    பன்னீர்செல்வம்அதிமுக84912
    எம்.நேருதேமுதிக2756
    எம்.எஸ்.ராஜேந்திரன்இஜக244
    ஏ.பாலாஜி நாம் தமிழர்8822
     போளூர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    அக்ரி கிருஷ்ணமூர்த்திஅதிமுக97732
    கே.வி.சேகரன்திமுக88007
    விஜயகுமார்அமமுக656
    கலாவதி சமக1580
    லாவண்யாநாம் தமிழர்10197
     ஆரணி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    சேவூர் ராமச்சந்திரன் அதிமுக102961
    எஸ்.எஸ். அன்பழகன்திமுக99833
    கு.பாஸ்கரன் தேமுதிக1861
    வி.மணிகண்டன் ம.நீ.ம.2213
    டி.பிரகலாதன் நாம் தமிழர்10491
     செய்யாறு
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    ஜோதிதிமுக102460
    தூசி கே.மோகன் அதிமுக90189
    வரதராஜன் அமமுக1760
    த.மயில்வாகனன்ம.நீ.ம.2429
    கோ.பீமன் நாம் தமிழர்12192
     வந்தவாசி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    எஸ்.அம்பேத்குமார் திமுக102064
    முரளி சங்கர்பாமக66111
    பெ.வெங்கடேசன்அமமுக1728
    ச.சுரேஷ்ம.நீ.ம.1692
    பிரபாவதிநாம் தமிழர்9284
    பெரணமல்லூர் அருகே அதிமுக பிரமுகர் வீடு, மோட்டார்சைக்கிளுக்கு மர்மநபர் தீ வைத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த முனுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி மனோகரன், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர். அவர், தற்போது ஆரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு முனுக்கப்பட்டு கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது.

    நெற்பயிர் சாகுபடி செய்யும்போதும், உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் ஆகிய பணிகளின்போது கிராமத்தில் தங்கியிருப்பார்கள். வேலைகள் முடிந்ததும் ஆரணிக்குச் சென்று விடுவார்கள். முனுக்கப்பட்டு கிராமத்தில் தற்போது யாரும் இல்லாதால் அங்குள்ள வீடு பூட்டிக்கிடந்தது.

    அவரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்த மர்மநபர் யாரோ முன்பக்க கதவின் மேலே உள்ள கம்பியை உடைத்து, அதன் வழியாக உள்ளே புகுந்துள்ளார். வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சூறையாடி உள்ளார். பீரோவில் வைத்திருந்த துணிமணிகள், பொருட்கள், பத்திரங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் குவித்து தீ வைத்து விட்டு தப்பிச் சென்றார்..

    தப்பிச்சென்ற மர்மநபர் நிலத்துக்குச் சென்று, அங்குள்ள பம்பு செட் கொட்டகையில் நிறுத்தி வைத்திருந்த மனோகரனின் மோட்டார்சைக்கிள், அவர் படுத்துத் தூங்கும் கட்டில் ஆகியவற்றுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றார். மேற்கண்ட இரு இடங்களில் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பெரணமல்லூர் போலீசார், தீயணைப்பு நிலையம் மற்றும் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து இரு இடங்களில் எரிந்த தீயை அணைத்தனர். இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை, தடயங்களை சேகரித்தனர்.

    தீ வைப்பு சம்பவம் தேர்தல் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 22 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1.615 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 306 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    ×