என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
    • உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கேளுர் ஊராட்சிக்கு உட்பட்ட தேப்பனந்தல் மாட்டு சந்தை ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை நடக்கிறது.

    அதுமட்டுமன்றி திருவண்ணாமலை மாவட்ட அளவில் இந்தப் பந்தல் மாட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா போன்ற மாநிலங்களிருந்தும் மாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் வியாபாரிகள் குவிய தொடங்கினர்.

    இந்நிலையில் அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த கட்டணம் 50ரூபாய்க்கு பதிலாக 120ரூபாய் கூடுதல் கட்டணம் வரி வசூலித்துள்ளனர்.

    மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது மட்டுமின்றி கட்டணம் ரசீதும் வழங்க மறுப்ப தாகவும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மாட்டு சந்தையை சீராக நடத்த கோரி மாட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழுப்புரம் ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்
    • பொதுமக்களை அடிப்பதாக புகார்

    வந்தவாசி:

    வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி வருவதாகவும் அப்பெண் பொதுமக்களை தகாத வார்த்தைகள் பேசியும், அடிக்கவும் செய்துள்ளார் என அப்பகுதி பொதுமக்கள் மூலம் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    பிறகு போலீசார் உடனே மீட்பு பணிகள் செய்து வரும் அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்து நேரடியாக சென்று பார்வையிட்ட‌ அறக்கட்டளையின் நிறுவனர் அசாருதீன் மற்றும் கேஷவராஜ் பெண்ணின் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் அருகில் உள்ள ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்.

    • 2 கிலோ பறிமுதல்
    • சேலம் மத்திய சிறையில் அடைப்பு

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கோட் டீஸ்வரன் மற்றும் போலீசார் கீழ்பென்னாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வட்ராபுத்தூர் சூர்யா (வயது 22), கீக்களூர் புரவடை வினோத் (23), மங்கலம் அஜித்குமார் (19), சந்துரு (21) ஆகிய 4 பேர் கஞ்சா விற்றதாக தெரிகிறது. அவர்களிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2/4கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் அம்மன் திருத்தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
    • விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்)24-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது.

    27-ந் தேதி தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்பட உள்ளது. டிசம்பர் 3-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். டிசம்பர் 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    கடந்த 30-ந்தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகா தேரோட்டம் நடைபெறாததால் பஞ்ச ரதங்களை முழுமையாக சீரமைத்து அதன் உறுதி தன்மையை இறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் அம்மன் திருத்தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

    இதே போல விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

    பஞ்ச ரதங்களில் உள்ள சிற்பங்கள் அச்சாணிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் மற்றும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது.
    • சூரிய கிரகணம் தொடங்கும் போது பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

    தீபாவளிக்கு மறுநாளான வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது. இதனை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலம் என்பதால் சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 25-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது கோவில் வளாகத்தில் 4-ம் பிரகாரத்தில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்களிடையே பீதி
    • செங்கம் போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள அரட்டவாடி, பேயாலம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது.

    செங்கம் அருகே உள்ள பேயாலம்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், அரட்டவாடி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் காமாட்சி அம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் மர்ம கும்பலால் கோவில் உண்டியல் உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகை உள்ளிட்டவைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    இதில் சுமார் 2 லட்ச ரூபாய் மற்றும் 6 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து செங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்செங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது இந்த திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • சிமெண்டு சாலை அமைக்க வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு ஒன்றி யக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.ஸ்ரீதர், ந.ராஜன்பாபு, துணைத்த லைவர் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், வந்தவாசியை அடுத்த தேசூரிலிருந்து பாஞ்சரை, கீழ்புத்தூர், சிவனம், ஜப்திகாரணி, நடுக்குப்பம், வந்தவாசி வழியாக சென்னைக்கு மீண்டும் அரசுப் பஸ் இயக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர் பா.தசரதன் பேசினார்.

    கொடியாலம் ஊராட்சியில் சுடுகாட்டு பாதைகளை சீரமைக்க வேண்டும், இருளர் காலனிக்கு சிமெண்டு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர் தீபா வெங்கடேசன் பேசினார்.

    பின்னர் பேசிய ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 4 பேர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்க லம் அடுத்த ஆண்டிப்பாளையம் அருகே உள்ள அருந்ததியர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46) முன் னாள் ராணுவ வீரர்.

    இவரது மனைவி கவிதா (29), இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே, மாரிமுத்து, கவிதா தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கவிதா தன் பிள்ளைகளுடன் காட்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு 8.15 மணியளவில் மாரிமுத்து தனது வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

    அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவரை ஆபாசமாக திட்டியபடி, சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு பின்பக்க வயல்வெளி வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    மாரிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, தலை, கை, முதுகு, தொடை என பல இடங்களிலும் வெட்டுக் காயங்களுடன் மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவின்படி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை யினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் 3 குற்றவாளி களும் விட்டு சென்ற செருப்புகளை சமூக வலைதளங்களில் அனுப்பி துப்பு துலக்க முயற்சித்தனர். சந்தேகத்தின் பேரில் கவிதாவின் செல்போன் அழைப்புகளை சோதனை செய்தனர். அதிலிருந்து சங்கர் என்பவரின் எண்ணுக்கு அதிகமுறை பேசியிருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து சங்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரின் செல்போனிலிருந்த அழைப்புகளை சோதனை செய்தனர். விசாரணையில் கவிதாவுக்கும் சிறுமூரை சேர்ந்த சங்கர்(45) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

    மாரிமுத்துவை கொன்று விட்டால் அவரது சொத்துக்கள் கவிதாவுக்கு வந்து விடும். அதைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழலாம் என இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

    பின்னர் சங்கரை கொல்ல ரூ.5 லட்சம் பேசி கூலிப்படையை அனுப்பியுள்ளனர்.

    சங்கர் கொடுத்த தகவலின் பேரில் அடைய பாளையம் அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(20), சிறுமூர் வடக்கு கொட்டா மேட்டை சேர்ந்த பாபு(22) மற்றும் கொலை செய்ய கூலிப்படைகளை அனுப்பிய சங்கர் (45), கவிதா ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவான அப்பு(24) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவ வீரரை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அனுப்பிய சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம்
    • பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சூரிய கிரகணத்தின்போது நடை அடைக்கப்படுவதில்லை. எனவே, கிரகணம் தொடங்கும்போது பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய கிரகணம்

    வருகிற 25-ந் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுதினம் மாலை 5.10 மணிக்கு தொடங்கி, 6.30 வரை நீடிக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில், சூரிய கிரகணம் நிகழும் நாளன்று, கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மரபு படி சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல திறந்து இருக்கும்.

    பக்தர்கள் வழக்கம் போல தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    கோவில் குளத்தில் தீர்த்தவாரி

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முக்கியமான விழாக்களின் போது கோவில் குளங்கள் மற்றும் தென்பெண்ணை செய்யாறு, கவுதம நதி போன்றவற்றில் தான் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    சூரிய, சந்திர கிர கணங்களின்போது அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

    அதன்படி, சூரிய கிரகணம் வரும் 25ம் தேதி மாலை நிகழ உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் ஆன்மிக மரபுபடி, அன்றைய தினம் வழக்கம் போல நடை திறந்தே இருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தவித தடையும் இல்லை. இது, அக்னி ஸ்தலம் என்பதால், இங்கு மட்டும் கிரகணத்தின் போது கோவில் நடை அடைக்கப்படுவதில்லை.

    சந்திர கிரகணத்தின் போது, கிரகணம் முடி யும்போதும், சூரிய கிரக ணத்தின்போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, வரும் 25ம் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் உதய நாழிகையில், கோவில் 4ம் பிர காரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    • குடும்பத்தை தரக்குறைவாக பேசியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 42), மும்பை ெரயில் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் ரவீந்திரன் அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு அரை நிர்வாணத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    கொலையாளியை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்கம் சின்ராஜ், திருவண்ணாமலை குணசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (26) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 15-ந்தேதி இரவு நானும், ரவீந்திரனும் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர், என்னையும், குடும்பத்தையும் தரக்குறைவாக பேசினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரை கீழே தள்ளி தகர சீட்டால் கழுத்தை அறுத்து, கீழே கிடந்த கல்லை அவர் மீது போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன் என்று அவர் போலீசாாிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பிரம்மாண்டமாக வரவேற்க ஆரணி தி.மு.க. முடிவு
    • ஆரணி அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

    ஆரணி அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்ததுஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு விருந்தினர் மாளிகையில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் தலைமை தாங்கினார்.

    வருகின்ற 29-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளாட்சி மாநாடு, இளைஞர் பாசறை கூட்டம், மூத்த கட்சியினருக்கு பொற்கொழி கொடுத்தல் ஆகிய நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார்.

    அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் பொற்கொழி வாங்கும் மூத்த கட்சியினரை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும் மாவட்ட செயலாளர் தணி வேந்தன் என்று அறிவுறுத்தினார்

    இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தயாநிதி, சிவானந்தம், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், மோகன், துரை.மாமது, மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • முன்விரோதத்தால் தகராறு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தை சேர்ந்த வர் குப்புசாமி (வயது 30). இவர் தென்சேந்தமங்கலம் கிராமத் தில் உள்ள முருகன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.

    கடந்த 11-ஆம் தேதி கோவிலில் பூசாரி குப்புசாமி இருந்த போது, அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் மகன் அஜய் (28) வீண் தகராறு செய்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசில் குப்புசாமி புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்கு பதிவு செய்து, வாலிபர் அஜய்யை நேற்று கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×