என் மலர்
திருவண்ணாமலை
- கதவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வி.ஏ.கே. நகரை சேர்ந்தவர் செல்லப்பன். தனியார் பஸ் உரிமையாளர். குடும்ப சூழ்நிலை காரணமாக, சொந்த வீட்டில் இருந்து வெளியேறி, அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றார்.
அதேநேரத்தில், சொந்த வீட்டில் தினசரி மின் விளக்கு எரியவிட்டுவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு வந்துவிடுவது வழக்கம்.
இதேபோல், மின்விளக்கை எரியவிட்டு வந்தவர், காலை மீண்டும் சென்றுள்ளார். அப்போது வீட்டுகதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.
விசாரணை
மேலும் பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. அதிலிருந்த சுமார் 20 பவுன் நகையை காணவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்தர்கள் வலியுறுத்தல்
- சினிமா பாடகர்களை வைத்து பாடுவதை மாற்ற வேண்டும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 2022 கார்த்திகை தீபத்திரு விழாவில் மகாதீபம் அன்று மாலை மகாதீபம் ஏற்றும் வேளையில் சினிமா பாடகர்களை வைத்து பாடல் பாடும் முறை கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
அதனை அறிமுகபடுத்தியது கோவில் நிர்வாகத்தினர். அதற்கு முன்பு ஓதுவார்கள் திருமுறை மற்றும் சிவாயநம பாராயணம் நடக்கும். இவர்கள் வந்த பிறகு அண்ணாமலையார் பாடல் தவிர ஐயப்பன் பாடலும் மாரியம்மன் பாடலும் தான் அதிகம் அண்ணாமலையார் கோயிலில் ஒலிக்கிறது. அப்படியே ஒலித்தாலும் வாயில் வந்த வார்ததைகளை எல்லாம் வைத்து பாடுவதை கேட்க சிரமமாக உள்ளது.
வருடம் முழுவதும் பாடும் ஓதுவார்கள் திருமுறை பாடுகிறார்கள். ஏன் மகாதீபத்தின் போது மட்டும் விலக்கிவைக்க படுகிறார்கள். அண்ணாமலையாரை நால்வர் பெருமக்கள் திருமுறைகளால் பாடி உள்ளனர்.
அந்த பாடல்கள் எதுவும் தெரியாத சினிமா பாடகர்களை வைத்து நடத்துவதை தவிர்த்து பழைய முறைப்படி சங்கத்தமிழ் பாடல்களை பாடும் ஓதுவார்களை வைத்து நடத்த வேண்டும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கடந்த 23-ம் தேதி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு, ஏ.கே.படவேடு, அனந்தபுரம், புதூர், குப்பம், கல்பட்டு, கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்றும் விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது.
போளூர் வடக்கு ஒன்றிய பாமக செயலாளர் வீரமணி தலைமையில் நடந்த இந்தவிழாவில் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாமக செயலாளர் இல.பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சென்னையில் 27-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தமிழ்நாடு மாநில கையுந்து பந்து மகளிர் அணிக்கான தேர்வு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேலோ இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இளை யோர் சுழற்சி கையுந்து பந்து போட்டிகள் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நவம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற வுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு மாநில கையுந்து பந்து மகளிர் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளை யாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்கும் வீராங்கனைகள், 01-01-2004-ம் தேதி அன்று அல்லது அதற்கு பின்பு பிறந்திருக்க வேண்டும். ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், மற்றும் இருப்பிட சான்றிதழ், ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயணப்படி வழங்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தின் 04175 - 233169, 74017-03484 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை
- நாட்டுத் துப்பாக்கி, கத்தி, 3 பைக் பறிமுதல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள தச்சம்பட்டு காப்பு காட்டு பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனச்சரகர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தச்சம்பட்டு காப்புக் காட்டுக்குச் சென்று வனத்துறையின் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் 2 மான்களை வேட்டையாடிய ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயது 36), விக்னேஷ் (26), காட்டு ராஜா (29), விஜய் (23), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மான் இறைச்சி, மான் தோல் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி, பேட்டரி, கத்தி 3 பைக்குகள் உள்ளிட்ட வைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஒருவர் மான்கறியை துண்டுகளாக்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் பரதராமி சரஸ்வதி நகர் பகுதியில் ஒருவரது வீட்டில்திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 3 பிளாஸ்டிக் பைகளில் மான் கறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மான் கறி வைத்திருந்ததாக செல்லமுத்து மகன் நேதாஜி (வயது 30) என்பவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் நேதாஜி மான் இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி நேதாஜி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நேதாஜிக்கு மான் இறைச்சி எங்கிருந்து கிடைத்தது அல்லது அவரே மானை வேட்டையாடினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது. திருவண்ணாமலை, அக்.25-
திருவண்ணாமலை அருகே உள்ள தச்சம்பட்டு காப்பு காட்டு பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனச்சரகர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தச்சம்பட்டு காப்புக் காட்டுக்குச் சென்று வனத்துறையின் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் 2 மான்களை வேட்டையாடிய ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயது 36), விக்னேஷ் (26),காட்டு ராஜா (29), விஜய் (23), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மான் இறைச்சி, மான் தோல் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி, பேட்டரி, கத்தி 3 பைக்குகள் உள்ளிட்ட வைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஒருவர் மான்கறியை துண்டுகளாக்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் பரதராமி சரஸ்வதி நகர் பகுதியில் ஒருவரது வீட்டில்திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 3 பிளாஸ்டிக் பைகளில் மான் கறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மான் கறி வைத்திருந்ததாக செல்லமுத்து மகன் நேதாஜி (வயது 30) என்பவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் நேதாஜி மான் இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி நேதாஜி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நேதாஜிக்கு மான் இறைச்சி எங்கிருந்து கிடைத்தது அல்லது அவரே மானை வேட்டையாடினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது.
- மும்முனை மின்சாரம் கிடைக்காததால் அவதி
- பலமுறை புகார் செய்தும் சீரமைக்கவில்லை என குற்றச்சாட்டு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் உள்ள மின் வாரிய டிரான்ஸ்பார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது.
இதனால் கடந்த ஒரு வாரமாக மும்முனை மின்சாரம் கிடைக்காததால், நெல் பயிர்கள் உள்பட பல்வேறு பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன. இதனை சீரமைக்கக்கோரி ஒண்ணுபுரம் இளநிலை பொறியாளரிடம் பலமுறை புகார் செய்தும் சீரமைக்கவில்லை.
மேலும் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் செலவுக்கு மின் வாரிய அதிகாரிகள் சிலர் அப்பகுதி மக்களிடம் தலா ரூ.500 பணம் தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து பாஜக மாநில விவசாய அணி செயலாளர் ரேகா தலைமையில், கண்ணமங்கலம் பாஜக பிரமுகர் முத்துவேல், உறுப்பினர்கள் ரமேஷ், மகளிரணி இந்துமதி, பாலமுருகன் ஆகியோர் நேற்று காலை ஒண்ணுபுரம் மின் வாரிய துணை மின் நிலையம் முன்பு மின் வாரிய பணியாளர்களைக் கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பைக் மீது லாரி மோதியது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குமார் (வயது 42) இவர் செய்யாறு மாங்கல் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
வேலை முடிந்து நேற்று காலை 8 மணி அளவில் வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் காஞ்சிபுரம் செய்யாறு சாலை அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் குமாருக்கு தலை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிக்க பணம் கேட்டு தாயாரை தாக்கியதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். டிரைவர். இவரது மனைவி உமா இவர்களுக்கு மதன்(19), அருண்(16) என்ற 2 மகன்களும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.
இவரது மூத்தமகன் மதன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு குடி மற்றும் கஞ்சா பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காக பணம் தேவைப்படும் போதெல்லாம் தனது தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் உமாவுக்கும், மதனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் உமாவிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் தனது தாய் என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த உமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த மதன், வழக்கம்போல் உமாவிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். உமா பணம் இல்லை என்று கூறியதால் மீண்டும் உமாவை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.500 ஐ பறித்துச்சென்றார்.
இதுகுறித்து உமா கணவன் செந்தில் குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு வந்த செந்தில்குமார், மதனை கண்டித்துள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த மதன், செந்தில்குமாரை தாக்க கீழே கிடந்த அம்மிக்கல்லை கையில் தூக்கி வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் மதன் கையில் இருந்து அம்மிக்கல்லை பிடுங்கி கீழே தள்ளி, அம்மிக்கல்லால் மதன் தலையில் அடித்து தாக்கினார். இதில் படுகாயமடைந்த மதனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி மதன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் திட்டத்தின் கீழ் போதிய பணி, சம்பளம் வழங்காததை கண்டித்து மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலசுந்தரம், ஆதிகேசவன் ஆகியோர் தலைமையில் முற்றுகை, மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, மேற்கு ஆரணி ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிபார்த்தீபன் ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- செய்யாறு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன்கன் நாவல் பாக்கம் பாபு, மாமண்டூர் ராஜ், திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.
வெங்கடேஷ் பாபு, வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வாகனங்களை நெடுஞ்சாலையிலே நிறுத்திவிட்டு செல்கின்றனர்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றது. பேருந்துகள், லாரி, கனரக வாகனம், கார், இருசக்கர வாகனம் என பல்வேறு வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி செல்கின்றது.
இந்நிலையில் கொட்டகுளம் கோணாக்குட்டை -கேட், அம்மாபாளையம், இறையூர், பாய்ச்சல், கண்ணக்குருக்கை, கோலாப்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் சாலையில் அங்கும் இங்கும் கடந்து செல்வதோடு வாகனங்களை நெடுஞ்சாலையிலே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
மேலும் மாலை நேரங்களில் வழி நெடுகிலும் கடைகள் அமைக்கப்படுவதால் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்கள் கடைக்கு செல்கின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் உயிர் சேதமும் ஏற்படுகிறது.
எனவே சாலையோரம் பொது இடத்தை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளதையும், மாலை நேரங்களில் கடைகள் அமைக்கப்படுவதையும் அப்புறப்படுத்தி வாகன விபத்துகளை தவிர்க்கவும், இனிவரும் காலங்களில் வாகன விபத்துகள் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நள்ளிரவு வரை காத்திருந்து ஏமாந்த பொதுமக்கள்
- போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி கூட்ரோட்டில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனம் தீபாவளி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி சீட்டு அறிமுகப்படுத்தியது.
சீட்டு மோசடி
அதன்படி ரூபாய் 3 ஆயிரம் 5,000 20,000 வரை மாதத்தவனை மற்றும் ஒரே தவணை என அறிவித்து அதில் முதலீடு செய்பவர்களுக்கு மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வழங்கப்படும் என கவர்ச்சியான விளம்பரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த திட்டத்தில் ஆள்சேர்க்க முகவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்தது. இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம் வேலூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்களிடம் முகவர் மூலமாகவும் நேரடியாகும் பல கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மறியல்
இந்நிலையில் தவணை தேதி முடிந்தும் தீபாவளி பொருட்கள் அறிவித்தது போல பொருட்கள் கொடுக்கவில்லை.
சீட்டில் கட்டிய பொதுமக்கள் மற்றும் ஏஜென்ட்கள் ஏராளமானோர் ஆரணி கூட் ரோட்டில்இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
அந்த நிதி நிறுவனத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆரணி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் ஆரணி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர். பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
சாலை மறியலை கைவிட்டு நிதி நிறுவன வளாகத்தில், செய்யார் ஐடி எதிரில் காலி மைதானத்திலும் மழையிலும் நனைந்து கொண்டு பட்டினியாக நள்ளிரவு வரை காத்திருந்தனர்.
பின்னர் வீடு திரும்பினர். இதனால் செய்யாறில் பரபரப்பு ஏற்பட்டது.






