என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He is said to have a drinking and ganja habit."

    • குடிக்க பணம் கேட்டு தாயாரை தாக்கியதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். டிரைவர். இவரது மனைவி உமா இவர்களுக்கு மதன்(19), அருண்(16) என்ற 2 மகன்களும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.

    இவரது மூத்தமகன் மதன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு குடி மற்றும் கஞ்சா பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதற்காக பணம் தேவைப்படும் போதெல்லாம் தனது தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதனால் உமாவுக்கும், மதனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் உமாவிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் தனது தாய் என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த உமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த மதன், வழக்கம்போல் உமாவிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். உமா பணம் இல்லை என்று கூறியதால் மீண்டும் உமாவை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.500 ஐ பறித்துச்சென்றார்.

    இதுகுறித்து உமா கணவன் செந்தில் குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு வந்த செந்தில்குமார், மதனை கண்டித்துள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த மதன், செந்தில்குமாரை தாக்க கீழே கிடந்த அம்மிக்கல்லை கையில் தூக்கி வந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் மதன் கையில் இருந்து அம்மிக்கல்லை பிடுங்கி கீழே தள்ளி, அம்மிக்கல்லால் மதன் தலையில் அடித்து தாக்கினார். இதில் படுகாயமடைந்த மதனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி மதன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×