என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலமுறை புகார் செய்தும் சீரமைக்கவில்லை."

    • மும்முனை மின்சாரம் கிடைக்காததால் அவதி
    • பலமுறை புகார் செய்தும் சீரமைக்கவில்லை என குற்றச்சாட்டு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் உள்ள மின் வாரிய டிரான்ஸ்பார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது.

    இதனால் கடந்த ஒரு வாரமாக மும்முனை மின்சாரம் கிடைக்காததால், நெல் பயிர்கள் உள்பட பல்வேறு பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன. இதனை சீரமைக்கக்கோரி ஒண்ணுபுரம் இளநிலை பொறியாளரிடம் பலமுறை புகார் செய்தும் சீரமைக்கவில்லை.

    மேலும் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் செலவுக்கு மின் வாரிய அதிகாரிகள் சிலர் அப்பகுதி மக்களிடம் தலா ரூ.500 பணம் தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இதனைக் கண்டித்து பாஜக மாநில விவசாய அணி செயலாளர் ரேகா தலைமையில், கண்ணமங்கலம் பாஜக பிரமுகர் முத்துவேல், உறுப்பினர்கள் ரமேஷ், மகளிரணி இந்துமதி, பாலமுருகன் ஆகியோர் நேற்று காலை ஒண்ணுபுரம் மின் வாரிய துணை மின் நிலையம் முன்பு மின் வாரிய பணியாளர்களைக் கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×