என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீபாவளி சீட்டு கட்டி ஏமாந்த பொதுமக்கள் ஆரணி சாலையில் மறியல் செய்த போது எடுத்த படம்.
தீபாவளி சீட்டு மோசடி கண்டித்து சாலை மறியல்
- நள்ளிரவு வரை காத்திருந்து ஏமாந்த பொதுமக்கள்
- போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி கூட்ரோட்டில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனம் தீபாவளி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி சீட்டு அறிமுகப்படுத்தியது.
சீட்டு மோசடி
அதன்படி ரூபாய் 3 ஆயிரம் 5,000 20,000 வரை மாதத்தவனை மற்றும் ஒரே தவணை என அறிவித்து அதில் முதலீடு செய்பவர்களுக்கு மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வழங்கப்படும் என கவர்ச்சியான விளம்பரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த திட்டத்தில் ஆள்சேர்க்க முகவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்தது. இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம் வேலூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்களிடம் முகவர் மூலமாகவும் நேரடியாகும் பல கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மறியல்
இந்நிலையில் தவணை தேதி முடிந்தும் தீபாவளி பொருட்கள் அறிவித்தது போல பொருட்கள் கொடுக்கவில்லை.
சீட்டில் கட்டிய பொதுமக்கள் மற்றும் ஏஜென்ட்கள் ஏராளமானோர் ஆரணி கூட் ரோட்டில்இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
அந்த நிதி நிறுவனத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆரணி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் ஆரணி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர். பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
சாலை மறியலை கைவிட்டு நிதி நிறுவன வளாகத்தில், செய்யார் ஐடி எதிரில் காலி மைதானத்திலும் மழையிலும் நனைந்து கொண்டு பட்டினியாக நள்ளிரவு வரை காத்திருந்தனர்.
பின்னர் வீடு திரும்பினர். இதனால் செய்யாறில் பரபரப்பு ஏற்பட்டது.






