என் மலர்
திருவண்ணாமலை
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தன.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நெல்வாய் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜு, திமுக மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோ. ரவி, ஞானவேல், தினகரன், சங்கர், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், முன்னாள் சேர்மன் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த அமுடூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் சதாசி வம் (வயது 30), கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மோட்டார்சைக்கிளில் அமுடூர் கிராமத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பூதேரி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் இவரது மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே புரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த கோவிந்தராஜ், சிவக்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக் காக வந்தவாசி அரசு ருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை
- திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை வ.உ.சிநகர் பகுதியில் வசிப்பவர் ரத்னசிங். எலக்ட்ரீசியன். இவரது மகன்கள் சதீஷ்சிங் (வயது 23), சந்து ருசிங் (21) ஆகியோர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு மோட்டார்சைக்கிளில் புறப் பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கீழ்பென்னாத்தூர் இந் திரா நகர் பை-பாஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்ததில் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (24), அங்குள்ள சமத் துவபுரத்தில் வசிக்கும் தியாகராஜன் (20), சதீஷ்குமார் (19) ஆகியோர் இவர்களிடம் செல்ாேன்களை பித்து விட்டு தப் பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங்கிடம் செல்போன்களை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டனர். 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கர வர்த்தி ஆகியோர் கைது செய்து செல்போன்களை மீட்டனர். பின்னர் 3 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
- மழை காலங்களில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது
- கழிவறையை பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓடு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாது நிலை இருந்து வருகிறது.
இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
இன்று பெருங்கடப்புதூர் கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் பருவதம் பூண்டி கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி கட்டிடம் பழைய கட்டிடம் மேலும் ஒடுகளால் ஆன கட்டிடத்தின் ஓட்டின் மீது மர இலைகள் அதிக அளவில் இருந்ததால் மழை நீர் எப்படி கீழே வரும் இப்படி இருந்தால் மழை காலங்களில் மழை நீர் ஒழுகும்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆய்வின் போது பள்ளி மாணவர்களை அழைத்து மதியம் உணவு எப்படி இருந்தது என்றும் எந்த வகையான சாதம் வழங்கப்பட்டது.
முட்டைகள் வழங்கபட்டதா என பல்வேறு கேள்விகளை மாணவர்களிடம் நேரடியாக கேட்டார். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறை சரியான முறையில் இல்லை என்று குற்றம் சாட்டினர். அதையும் ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் ஆய்வின் போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர். மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் பலர் இருந்தனர்.
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ.வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பெருங்கடப்புத்தூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மனுநீதி நாள் விழா நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அனாமிகா, தெள்ளார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி, வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பெருங்கடப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ஆதிகேசவன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம். எல். ஏ, கலந்துகொண்டு 418 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
விழாவில் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சுரேஷ்குமார், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன் பாபு,பரணிதரன், தேசூர் வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி, சுகாதார ஆய்வாளர் கணேசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சுகாதா ரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை பார்வையிட்டனர்.
- வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
- போலீசார் சமாதானம் செய்தனர்
ஆரணி:
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அரிகரன் நகரில் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமாக காலி இடம் உள்ளது. இவரது இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க பன்னீர்செல்வம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதன்படி செல்போன் டவர் அமைப்பதற்காக அந்த இடத்தில் முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே ஒரு செல்போன் டவர்உள்ளதாகவும், அதன் மூலம் வீடுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் ராஜி என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அங்கு செல்போன் டவர் அமைக்க தடைவிதித்தனர்.
இது சம்பந்தமாக பொது மக்களிடமும் தெரிவித்து சாலை மறியல் செய்யக்கூடாது எதுவாக இருந்தாலும் மனு அளியுங்கள் என்று கூறி சமரசம் செய்து அவர்களை கலைந்து செல்ல செய்தனர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்தை சரி செய்யும்பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- 6 பேர் கைது, 30 பேர் மீது வழக்கு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை,
கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவில் காளை மாடு விடும் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலின் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின் போது ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது கெங்கவரம் பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மீண்டும் இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ஒரு தரப்பினருக்கு படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தால் ஆதமங்கலம் புதூர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் தகராருக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திடீரென நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கடலாடி போலீசார் மற்றும் திருவண்ணாமலை ஏடிஎஸ்பி ஸ்டீபன், போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் தற்போது இரு தரப்பினர்களிடமிருந்து சசிகுமார், சிதம்பரம், கவியரசு, மற்றும் தினேஷ், அருண், அஜித்குமார் ஆகிய 6 பேரை கடலாடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்படி ஆதமங்கலம் புதூர் பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
- மாணவ மாணவிகள் தங்களது குறைகளுக்கு எழுதி போடலாம்
- ஒண்ணுபுரம் அரசு பள்ளியில் சிறப்பு ஏற்பாடு
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை வாயில் சுவற்றில் மாணவர்கள் மனசு தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தபால் பெட்டி மூலம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது வகுப்பறையில் உள்ள குறைகள் உள்பட பல்வேறு புகார்களை எழுதி இப்பெட்டியில் போடவேண்டும்.
இதனடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு தங்கள் வகுப்பறையில் பேன், விளக்குகள், பென்ச் ஆகிய பற்றாக்குறை மற்றும் வேறு ஏதாவது புகார்கள் இருந்தாலும் போடலாம். இதன் மூலம் மாணவ மாணவிகள் தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம்.
இது சம்பந்தமாக தலைமை ஆசிரியர் பாபுவிடம்,கேட்டபோது, மாணவ மாணவிகளுக்கு தங்கள் வகுப்பறை குறைகளை கூற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த ஏற்பாடு செய்துள்ளோம்.
சில வகுப்பறைகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இல்லை என தெரிவித்தால் உடனடியாக சரி செய்ய முடியும். என்றார்.
- முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முதல் நாள் சஷ்டி விழாவில் தாரகா சுரனை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்க ப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ முருகப்பெருமான் எதிரில் இருந்த தாரகாசூரணை போரில் வென்று தலையை துண்டிக்கும் நிகழ்ச்சி நடந்தது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை தரிசித்து சென்றனர்.
- பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்
- சிறுவயது முதல் வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டினார்
வந்தவாசி
வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். பட்டதாரியான இவர் சிறுவயது முதல் வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் இரும்பேடு கிராமத்தில் உள்ள மக்களுக்கு சூரியன் கிரகணம் பிடிப்பதை மோகன்ராஜ் அதி நவீன டெலஸ்கோப் மூலம் காட்ட முடிவெடுத்தார்.
இதை அடுத்து பொதுமக்கள் பார்வைக்காக அதிநவீன டெலஸ்கோப் வைத்து சூரிய கிரகணம் பிடிப்பதை காட்டினார். இந்த சூரிய கிரகணத்தை பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு விற்பனை
- அதிகளவில் வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 216 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.3½ கோடி வரை மதுபான விற்பனை நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் தீபாவளி அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. இதில் 8 ஆயிரத்து 79 பெட்டி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளும், 10 ஆயிரத்து 637 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.7 கோடியே 62 லட்சத்து87 ஆயிரத்து 920 வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ் பென்னாத்தூர் தாலுக்காவிற்குட்பட்ட 77 கிராமங்களில் வசிக்கும் தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை பெற்று வரும் 11,820 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், நகர செயலாளர் சி.கே.அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.கே. பன்னீர்செல்வம், பேரூ ராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாட்சியர் சக்கரை அனைவரையும் வரவேற்றார். தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சமூக பாதுகாப்புதிட்டத்தின் கீழ் உதவி தொகை பெற்று வரும் பயனாளிகள் 11,820 நபர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், தலைமை இடத்து துணை தாசில்தார் தனபால், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், பிரவீன் குமார், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பாக்கியராஜ், ஜீவாமனோகரன், கே.பி.மணி, அம்பிகாராமதாஸ், ஒன்றிய நிர்வாகிகள் சோமாஸ்பாடி சிவகுமார், கனபாபுரம் ஊராட்சி மன்றதலைவர் பரசுராமன், வேடநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, நகர திமுக நிர்வாகிகள் பழனி, இளங்கோ, அருள்மணி, பூக்கடை ராஜேஷ், சின்னா, வினோத், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் நன்றிகூறினார்.






