என் மலர்
திருவண்ணாமலை
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய ஜீப் வாங்கி தர வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த மாவட்டம் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை. 1957-ல் முதல் முதலாக தி.மு.க. தேர்தலில் சந்திக்கும் போது 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் பெற்ற மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். அன்று முதல் இன்று வரை இது கலைஞரின் கோட்டையாகவும், தி.மு.க. கோட்டையாகவும் உள்ளது.
இதுவரைக்கும் திருவண்ணாமலையில் இலை முளைக்கவே இல்லை. 1972-ல் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற இயக்கத்தில் இருந்து இதுவரைக்கும் திருவண்ணாமலை தொகுதியில் இலை முளைக்கவே இல்லை. தொடர்ந்து சூரியன் தானே. நமது இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பரம்பரை, திராவிட இயக்கத்தினுடைய பரம்பரை, திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் பரம்பரை.
எங்களுக்கு முதல் பரம்பரை பெரியார், 2-வது பரம்பரை அண்ணா, 3-வது பரம்பரை கலைஞர், 4-வது பரம்பரை தமிழகத்தின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த இளைஞர்களை, திராவிடர் மொழி உணர்வையும், பகுத்தறிவையும் இன்னும் 50 ஆண்டுகாலத்திற்கு கொண்டு செல்கின்ற பொறுப்பை நீங்கள் (உதயநிதிஸ்டாலின்) எடுத்து உள்ளீர்கள்.
கலை உலகம் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. இந்த இயக்கத்தின் கொள்கையை நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு அண்ணா கலை உலகத்தை கையில் எடுத்தார்.
அவருக்கு பின்னர் கலைஞர், ஸ்டாலின் ஆகியோரும் இதனை கையில் எடுத்து திராவிட இயக்கத்தின் கொள்கையை மக்களிடம் கொண்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக திராவிட நடிகராக உதயநிதி உள்ளார். அண்ணாவில் இருந்து இன்று வரை கலை உலகத்தையும், திராவிடத்தையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு அடையாளம் நீங்கள் தான். திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரியை தந்தவர் தலைவர் கருணாநிதி. அவரது ஆட்சி காலத்தில் தான் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைத்தது.
இன்றைய முதல்- அமைச்சர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது 385 ஒன்றியங்களுக்கு ஜீப் வழங்கினார். அந்த ஜீப் தான் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது.
அதனால் நீங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி அந்த 385 ஒன்றிய தலைவர்களுக்கு புதிய ஜீப் வாங்கி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
- திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடந்தது
கலசபாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தென்பள்ளிப்பட்டு கலைஞர் திடலில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடந்தது.
இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
திருவண்ணாமலைக்கு நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு முதல் முறையாக தற்போது வந்துள்ளேன் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க இளைஞர் அணி முக்கிய காரணம் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதி களையும் இணைத்து நடத்தப்படும் இந்த இளைஞர் அணி பாசறைக் கூட்டம் மாநாடு போல் காட்சியளிக்கிறது.
கடந்த ஜூன் மாதம் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் இந்த இளைஞர் பாசறை கூட்டத்தை தொடங்கி னோம். அதனைத் தொடர்ந்து 5 மாதங்களில் 210 தொகுதிகளில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தியுள்ளோம்.
இந்த கூட்டமானது திமுகவின் வரலாற்றை இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த பாசறை கூட்டம் ஒவ்வொரு தொகுதிகளிலும் நடத்த வேண்டும் என்று நான் அனைத்து மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொண்டேன்.
கூட்டம் சேர்ப்பது பெரிது அல்ல கொள்கையை கொண்டு போய் சேர்ப்பது தான் முக்கியம். அதனால் மீண்டும் தொகுதி வாரியாக மற்றும் ஒன்றியங்கள் வாரியாக இந்த இளைஞர் பாசறை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
அண்ணன் அமைச்சர் எ.வ.வேலு தலைவர் கருணாநிதியிடம் பயிற்சி பெற்றவர் எதிலும் வல்லவர் என்பதை செயல்படுத்தி காட்ட க்கூடிய திறமை மிக்கவர்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வர முடியவில்லை.
இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய உரிமை மற்றும் பல்வேறு திட்டங்களை அத்தனையும் பறிக்கப்படுகின்றன. தி.மு.க. எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது. இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
உயர்கல்வியில் இந்தி ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும் என்ற மத்திய மந்திரி அமித்ஷாவை எதிர்த்து முதல் முதல் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதனை தொடர்ந்து தான் மற்ற மாநிலங்களில் எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க.வினர் தமிழகத்தில் எப்படியாவது இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். திராவிட கழகம் இருக்கும் வரை தலைவர் மு.க. ஸ்டாலின் இருக்கும் வரை இந்தியை தமிழகத்தில் கொண்டு வரவே முடியாது.
பா.ஜ.க.வின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் எங்கள் தலைவர் மு.க ஸ்டாலின் அடிபணிய மாட்டார்.
தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் பிரதமர் திருக்குறளை பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் பேசுவார். ஆனால் தமிழகத்திற்கு எதுவும் செய்ய மாட்டார்.
முன்பெல்லாம் தி.மு.க.வா அ.தி.மு.க. வா என்று பேசிக் கொண்டிருந்த நிலை மாறி ஆரியமா திராவிடமா என்று பேசப்பட்டு வருகின்றன
அதிமுகவிற்கு என்று கொள்கை எதுவும் கிடையாது ஒரே கொள்கை தி.மு.க.வை எதிர்ப்பது தான். தற்போது வலிமையான தலைமை இல்லாத காரணத்தால் நான்காக பிரிந்து உள்ளன.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- வருமுன் காப்போம் சிறப்பு முகாம் நடந்தது
- பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஒன்றிணைந்து நடத்திய கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஏ.சி மணி, ஒன்றிய செயலாளர்கள் துரை.மாமது, சுந்தர், மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள் முள்ளிபட்டு ரவி, ஜெய்சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி கோபி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கீதா ஜெயவேல், காமக்கூர் அரசு மருத்துவர் விஜயகுமார், சந்திரலேகா, நரேந்திரன், மோனிகா, தனலட்சுமி, மற்றும் திமுக நிர்வாகிகள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- காட்பாடி பெண் உள்பட 4 பேர் கைது
- தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திவ்யதர்ஷினி, ரேஷ்மா ஆகிய மகள்களும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கவிதா காட்பாடியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு மாரிமுத்துவை வீடு புகுந்து கும்பல் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
வீட்டில் ரத்தகாயங்களுடன் கிடந்த அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாரி முத்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக் டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கவிதா அவரது கள்ளக்காதலன் செட்டித்தாங் கலை சேர்ந்த சங்கர் மற்றும் சிறுமூர் பாபு என்ற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகியோருடன் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
அவர்கள் வீட்டில் இருந்த மாரிமுத்துவை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து கவிதா, சிறுமூர் பாபு, அடையபுலம் பிரகாஷ் ராஜ், அப்பு ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சங்கரை தேடி வருகின்றனர்.
- மதுபோதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குமார் (வயது 43), லாரி டிரைவர். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், கீர்த்தனா, கார்த்திகா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
இவர் கடந்த 25-ந் தேதி மதுபோதையில் வீட்டின் மாடி பகுதியில் இருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அஞ்சலி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதாக புகார்
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் வேடப்பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொதுமக்கள் நாள்தோறும் வணங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து வேடப்பாளையத்தம்மன் கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடிக் கொண்டு கோவிலுக்கு வருபவர்களை ஆபாசமாக பேசுவதாகவும், கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்க மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக பலமுறை தாசில்தார் அலுவலகத்திலும், காவல் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கோவிலை சொந்தம் கொண்டாடி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வந்தவாசி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
இதனால் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருவண்ணாமலை நகர எல்லையான சோ.கீழ்நாச்சிப் பட்டு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 60 அடி உயரமுள்ள கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை மற்றும் நகர்புற-ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு மற்றும் கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உதயநிதிஸ்டாலின் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். அவருக்கு திருவண்ணாமலை நகர எல்லையான சோ.கீழ்நாச்சிப் பட்டு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் இன்று காலை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள எ.வ.வேலு மகளிர் மெட்ரிக் பள்ளி திறப்பு விழாவில்கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தார்.
பின்னர் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கருணாநிதி சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலசபாக்கம் தொகுதி தென்பள்ளிப்பட்டு ஊராட்சி கலைஞர் திடலில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெற உள்ள திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
பயிற்சி பாசறைக்கு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எவரஸ்ட் என்.நரேஷ்குமார் வரவேற்று பேசினார்.
பயிற்சி பாசறையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.
இன்று மாலை திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாராகிளினிக் கட்டிடம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மாலை 5 மணியளவில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 60 அடி உயரமுள்ள கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை கலைஞர் திடலில் நகர்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிக்கு பொதுப்பணித் துறை அமைச்சரும், உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு தலைமை வகிக்கிறார். மாநாட்டில் கலந்து கொண்டு கட்சி முன்னோடிகளுக்குபொற்கிழி வழங்கியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பேசுகிறார்.
- தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
- கிரிவலப் பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
"கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை. பெல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் 5 தேர்களையும் 2 முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன கட்டண டிக்கெட் விற்பனை குறித்து கோவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.
பெயரளவில் இல்லாமல் மருத்துவ முகாம்களை செயல்படுத்த வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும்.
கிரிவலப் பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோவிலில் உள்ள கழிப்பறைகளையும், திருப்பதிக்கு நிகராக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.
தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம்.
இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுபடி, தீபத் திருநாளில் மலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,700 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும்"
இவ்வாறு அவர் பேசினார்.
- கோரிக்கை மனுக்கள் அளித்தனர்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விரைவில் பவளவிழா நடைபெறுவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் முன்னாள் மாணவர்கள் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.
விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டரங்கம் அமைப்பு தொடர்ச்சியாக அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோரிடம் ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நேற்று
மாலை, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் பாலமுருகன் பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தையும், காலியாக உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.மேலும் விளையாட்டு மைதானத்தை மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலுக்கு உரிய இடத்தையும் தேர்வு செய்தார்.
இதற்கு பின்னர் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினார். கிராமப்புற மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற தமது ஆர்வத்தை தெரிவித்தார். பள்ளி சார்பாகவும், முன்னாள் மாணவர் சங்கம் சார்பாகவும் சால்வை அணிவித்து பாராட்டினர்.
- முன்விரோத தகராறில் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த கீழ்நெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மகள் நந்தீஸ்வரி அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முருகனின் அண்ணன் மகன் விக்னேஷ் கரந்தை கிராம பஸ் நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் இருந்தார்.
அப்போது அங்கு வந்த தமிழ் செல்வன் மற்றும் அவரது சகோதரர் யுவராஜ் ஆகியோர் விக்னேஷிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் அருகில் இருந்த பீர் பாட்டிலால் விக்னேசை தலை மீது தாக்கினார்.
இதில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் தமிழ்செல்வன் விக்னேசிடம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த விக்னேஷ் செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து முருகன் தூசி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர்-திருவண்ணாமலை பஸ்கள் மாற்று பாதையில் இயக்கம்
- வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்
கண்ணமங்கலம்:
வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கண்ண மங்கலம் ரெயில்வே கேட் வழியாக செல்கின்றன. இன்று காலை 9 மணிக்கு திடீரென ரெயில்வே கேட்டில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் தொடங்கியது.
இதனால் வேலூரில் இருந்து திருவண்ணாமலை போளூர் திருக்கோவிலூர் திருச்சி செல்லும் வாகனங்களும் அங்கிருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்களும் இருபுறமும் சாலையில் அணிவகுத்து நின்றன.
கண்ணமங்கலம் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழ்பள்ளிப்பட்டு கொங்க ராம்பட்டு ரெயில்வே கேட் வழியாக திருப்பி விடப்பட்டன.
இதன் காரணமாக வாகனங்கள் அந்த சிறிய சாலையில் சென்று வர மிகவும் அவதி அடைந்தன. முதலில் காலை 9 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரம் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டது.
ஆனால் பணிகள் அதிகமாக இருப்பதால் மாலை 5 மணி வரை கூட நடக்கலாம் அதுவரை வேலூர் திருவண்ணாமலை சாலையில் வாகனங்கள் மற்றும் பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- பைக்கில் சென்றபோது விபத்து
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுதுரை இவர் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரின் கார் டிரைவராக பணி செய்து வந்தார். நேற்று காலை 9 மணி அளவில் தனது பைக்கில் பொன்னுதுரை வாலாஜாபாத்திற்கு சென்று கொண்டிருந்தார்
அப்போது ஆற்காடு காஞ்சிபுரம் சாலை வட இலுப்பை கிராமம் அருகே வந்தார். அப்போது வளைவு ஒன்றின் எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுதுரை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பொன்னு துரையின்மனைவி சித்ரா பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






