என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி
  X

  கண்ணமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்த காட்சி.

  ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலூர்-திருவண்ணாமலை பஸ்கள் மாற்று பாதையில் இயக்கம்
  • வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்

  கண்ணமங்கலம்:

  வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கண்ண மங்கலம் ரெயில்வே கேட் வழியாக செல்கின்றன. இன்று காலை 9 மணிக்கு திடீரென ரெயில்வே கேட்டில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் தொடங்கியது.

  இதனால் வேலூரில் இருந்து திருவண்ணாமலை போளூர் திருக்கோவிலூர் திருச்சி செல்லும் வாகனங்களும் அங்கிருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்களும் இருபுறமும் சாலையில் அணிவகுத்து நின்றன.

  கண்ணமங்கலம் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழ்பள்ளிப்பட்டு கொங்க ராம்பட்டு ரெயில்வே கேட் வழியாக திருப்பி விடப்பட்டன.

  இதன் காரணமாக வாகனங்கள் அந்த சிறிய சாலையில் சென்று வர மிகவும் அவதி அடைந்தன. முதலில் காலை 9 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரம் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டது.

  ஆனால் பணிகள் அதிகமாக இருப்பதால் மாலை 5 மணி வரை கூட நடக்கலாம் அதுவரை வேலூர் திருவண்ணாமலை சாலையில் வாகனங்கள் மற்றும் பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×