என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து நடந்தது
    • போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகிறது. குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உட்பட பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் போதிய ஆசிரியர்கள் இல்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அடிப்படை வசதிகள் உட்பட போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பள்ளி மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியின் கேட்டை மூடி பூட்டு போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    • கனமழை காரணமாக நடவடிக்கை
    • முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

    வேலூர்:

    தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை செய்யாறு, வெம்பாக்கம் வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    செய்யாறு நகர பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

    மழையின் காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    காலையில் மழையையும் பொருட் படுத்தாமல் பள்ளிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகள் விடுமுறை அறிவித்த பிறகு வீடு திரும்பினர்.

    நகரப் பகுதிகளில் சில மாணவர்கள் ஆரவாரம் செய்து சென்றதை காண முடிந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவில் கடும் பனி கொட்டியது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. கடும் பனி காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    ஓச்சேரி முதல் நாட்றம்பள்ளி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் காலையில் வாகனங்கள் விளக்கு போட்டபடி சென்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    • வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவில் கடும் பனி கொட்டியது.
    • ஓச்சேரி முதல் நாட்டறம்பள்ளி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை செய்யாறு, வெம்பாக்கம் வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    செய்யாறு நகர பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

    மழையின் காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    காலையில் மழையையும் பொருட்படுத்தாமல் பள்ளிகளுக்குச் சென்ற மாணவ-மாணவிகள் விடுமுறை அறிவித்த பிறகு வீடு திரும்பினர்.

    நகரப் பகுதிகளில் சில மாணவர்கள் ஆரவாரம் செய்து சென்றதை காண முடிந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவில் கடும் பனி கொட்டியது.

    ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. கடும் பனி காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    ஓச்சேரி முதல் நாட்டறம்பள்ளி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் காலையில் வாகனங்கள் விளக்கு போட்டபடி சென்றன.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    • கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சஷ்டி விரதம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், சஷ்டி விரதம் நிறைவையொட்டியும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    இதனால் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சஷ்டி விரதம் நிறைவையொட்டி இக்கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. வழக்கமாக சஷ்டி விரதத்தன்று கம்பத்து இளையனார் சன்னதியை பக்தர்கள் 108 முறை வலம் வருவார்கள். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் கம்பத்து இளையனார் சன்னதியை சுற்றி 108 முறை வலம் வந்தனர். மேலும் அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள வட வீதி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விரதம் இருந்த பக்தர்கள் காலை இருந்து கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ப்கதர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

    • ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ ரூ.150, கால் கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் காணிக்கை செலுத்தலாம்
    • கோவில் அலுவலர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். கொரோனா தளர்வுகளை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதனால் இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர கூடும் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பாக்கப்படுகிறது. அதையொட்டி தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

    இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம் என்று கோவில் அலுவலர்கள் தொிவித்தனர்.

    • 4 மாதங்களுக்கு பின்பு டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த நீலன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 27) டிரைவர்.

    அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடந்த 4 மாதத்துக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய போது மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக மாணவியின் தந்தை கலசப்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியுடன் செல்லப்பாண்டியை கைது செய்து அழைத்து வந்தனர். அந்த மாணவியை திருவண்ணாமலை அரசு காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டுள்ளார்.

    மேலும் செல்ல பாண்டியனை போக்சோ சட்டத்தில் கலசப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலை ஊர் மக்கள் சார்பாக புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 3 கால யாகசாலை பூஜை செய்து, பின்னர் யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கொண்டு மேள வாத்தியம் முழங்க வலம் வந்த சிவாச்சாரியார்கள் முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    நிகழ்ச்சியை காண சுற்று வட்டார கிராம மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 24-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தீப விழா தொடங்குகிறது
    • டிசம்பர் மாதம் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறாலும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 27-ந் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    இவ்விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்திரிக்கை வழங்குவதற்காக கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதையடுத்து கோவில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட பத்திரிக்கைகளை கோவில் அலுவலர்களிடம் வழங்கினர்.

    அதனை தொடர்ந்து கோவில் அலுவலர்கள் சிவாச்சாரியார்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கி பத்திரிக்கை விநியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.

    • வெறி பிடித்த நாய் இன்று சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்து தாக்கியது.
    • காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான நாய்கள் தெருவில் சுற்றிதிரிகின்றன. இதில் ஒரு நாய் வெறிபிடித்த நிலையில் தெருவில் பைக் மற்றும் நடந்து செல்பவர்களை பார்த்து குரைத்து வந்தது.

    இந்நிலையில் வெறி பிடித்த நாய் இன்று சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்து தாக்கியது.

    இதில் ஒரு சிறுவன், 5 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். மேலும் அந்த நாய் 4 மாடுகளையும் கடித்து குதறியது.

    இதனால் ரோட்டில் செல்பவர்கள் அச்சமடைந்து பீதியுடன் சென்றனர். காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் அப்பகுதி கிராம மக்கள் வெறி நாயை துரத்தி சென்று கல் மற்றும் கம்பால் தாக்கி அடித்து கொன்றனர்.

    இறந்த நாயை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொண்டு சென்று புதைத்தனர்.

    • மத்திய அரசை கண்டித்து நடந்தது
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் புதிய பஸ் நிலையம் எதிரில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்தி திணிப்பு வேண்டாம் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சர்தார், தங்கமணி, அஷ்ரத்அலி உள்பட ஏஐடியுசி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • 17-ம் ஆண்டு நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று 17-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக நடைபெற்றது.

    6 நாட்கள் நடைபெற்ற விழாவில் முதல் நாள் சந்தன காப்பு அபிஷேகமும், 2-ம் நாள் பன்னீர் அபிஷேகம், 3-ம் நாள் பஞ்சாமிர்தாபிஷேகம், நான்காம் நாள் விபூதி அபிஷேகம், ஐந்தாம் நாள் தயிர் அபிஷேகம், நடைபெற்றன.

    ஆறாவது நாளான இன்று டாக்டர் சிவனேசன் தலைமையில் பால்குடம் ஊர்வலம் போளூர் டவுன் சோமநாத ஈஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு நற்குன்று பாலமுருகன் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர் . நாளை (திங்கட்கிழமை) வள்ளி தெய்வானைக்கு திருமணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியை கோயில் நிர்வாகிகள் தலைவர் ராமச்சந்திரன், தர்மகத்தா செல்வம், துணை தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியம், என்றும் இறைவன் தொண்டில் மன்னு சுவாமிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதேபோல் போளூர் அருகே உள்ள ஆர் குன்னத்தூர் முருகர் கோவிலில் இன்று பாலாபிஷேகம் நடைப்பெற்றது.

    காளியம்மன் கோவிலில் இருந்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கருணா சுவாமிகள் தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று ஆர் குன்னத்தூர் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். இந்த விழா ஏற்பாடுகளை கருணா சாமிகள் செய்திருந்தார்.

    • கடனுதவிகள் குறித்து விளக்கினர்
    • சிறு வணிகருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒண்ணுபுரம் கிளை மேலாளர் பாரதி தலைமை தாங்கிகார். காசாளர் அகிலா முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவு வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் சிறு வணிகக் கடன், மகளிர் குழு கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் குறித்து விளக்கிக் கூறினார்.

    சிறு வணிகருக்கு ரூ.50 ஆயிரம் ஒரு நபருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

    இறுதியில் உதவியாளர் நாராயணன் நன்றி கூறினார்.

    ×