என் மலர்
திருவண்ணாமலை
- புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என உறுதி
- கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியை கதறி அழுதபடி புகார் செய்ததையடுத்து நடவடிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பெருமாள் கோயில் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது என தலைமை ஆசிரியர் சாந்தி, பேருராட்சி வார்டு சபா கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி அழுதபடி புகார் செய்தார்.
இந்த சம்பவம் அனைத்து சமூக வலைத்திலும் பரவியது. இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில், கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டது.
இதையடுத்து முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியை சாந்தியிடம், கட்டிடங்கள் குறித்து ஏன்? என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என வினவினார்.
தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என தலைமை ஆசிரியரிடம் உறுதியளித்தார்.
அப்போது ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், வழக்கறிஞர்வெ ங்கடேசன், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், பொருளாளர் சிந்தியா செல்வம், வார்டு கவுன்சிலர்கள் சுகுணாகுமார், சௌமி யாகமல், இளைஞணி ஏழுமலை உள்பட பலர் உடனிருந்தனர்.
- நிதி கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டது
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதம்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை வாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா, பெரணமல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயண மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் அலுவலக மேலாளர் பாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பொது நிதி கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அனைத்து கிரா மங்களிலும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் உள்பட கலந்து கொண்டனர்.
- சப்-கலெக்டர் உடன் சென்றார்
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநில வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் மனிஷ் நர்னவாரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்யார் சப்-கலெக்டர் அனாமிகா ஊரக உதவி இயக்குனர்கள் சுரேஷ்குமார் யுவராஜ் கோட்ட உதவி திட்ட அலுவலர் இமயவர்மன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் தாசில்தார் சத்யன் வெம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் தேவி செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நேர்வில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை எந்தவித விடுதலும் இன்றி தொழிலாளர் துறை இணையதளமான labour.tn.gov.in/ism என்ற இணையதளம் முகவரியில் உள்ளீட்டு முகவரியினை புதிதாக உருவாக்கி அதன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உரியவாறு பதிவேற்றம் செய்யாமல் அவர்களை பணி அமர்த்தியது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது 1979-ம் ஆண்டு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெறும் தொழிலாளர் சட்டம் மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தேகம் இருந்தால்.
அவ்வாறு பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடமோ அல்லது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.Tiruvannamalai News The details of migrant workers should be uploaded on the website
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நேர்வில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை எந்தவித விடுதலும் இன்றி தொழிலாளர் துறை இணையதளமான labour.tn.gov.in/ism என்ற இணையதளம் முகவரியில் உள்ளீட்டு முகவரியினை புதிதாக உருவாக்கி அதன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உரியவாறு பதிவேற்றம் செய்யாமல் அவர்களை பணி அமர்த்தியது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது 1979-ம் ஆண்டு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெறும் தொழிலாளர் சட்டம் மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தேகம் இருந்தால்.
அவ்வாறு பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடமோ அல்லது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த தாழையூத்து மற்றும் அதன் அருகே உள்ள போயம்பள்ளி தண்டா பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதேபோல நேற்று முன்தினம் பொன்னித்தண்டா கிராம பகுதியில் உள்ள கோவிலிலும் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து செங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கண்ணமங்கலம் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
- புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதியில் கிராம சபை நகர சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.அதன்படி கண்ணமங்கலம் பேரூராட்சியின் கிராம சபை கூட்டம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி கலந்து கொண்டார்.துணைத் தலைவர் குமார், செயல் அலுவலர் சுதா கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி இந்த பள்ளியில் 147 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இங்குள்ள 4 பள்ளி கட்டிடங்களும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதே போல் இந்த பள்ளியில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதியும் இல்லாததால் அவதி அடைந்து வருவதாக கதறி அழுதபடி கோரிக்கை வைத்தார்.
பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு கிராம சபை கூட்டத்தில் கதறி அழுதபடி தலைமை ஆசிரியை ஒருவர் கோரிக்கை வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை ஆசிரியையின் கோரிக்கையை ஏற்று இன்று காலை பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தன் மேற்பார்வையில் பாழடைந்த கட்டிடங்கள் பொக்லைன் எயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சரவணன் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் புதுப்பாளையம் பேரூராட்சியில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் பகுதி சபை கூட்டம் 10-வது வார்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி அனைவரையும் வரவேற்று பேசினார்.
பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் கோரிக்கை களையும், நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வட்டாட்சியர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் பவ்யாஆறுமுகம், சீனுவாசன், மாவட்ட கவுன்சிலர் அல்லிந்தல் மனோகரன், ஜெயபிரகாஷ், கா.சு.இளங்கோவன், சுதாகர், தலைமை எழுத்தர் ரமேஷ் உள்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
சென்னையில் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் திருஞானசம்மந்தம் தலைமையில், பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நகர பாஜக தலைவர் முத்துவேல், ஒன்றிய துணைத் தலைவர்கள் பரணி ஆனந்தன், அருளப்பன், நிர்வாகிகள் பன்னீர் பாலாஜி, மூர்த்தி, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் பா.ஜ.க. நகர தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துசாமி, துரைநா டார், மாவட்டச் செயலாளர் குருலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் நவநீதன், சித்தரவேலு, நகரத் துணை தலைவர் சதீஷ், மணிகண்டன், குணா, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பற்கேற்பு
- ஏராளமனோர் கலந்து கொண்டனர்
வேட்டவலம்:
வேட்டவலம் பேரூராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி பேரூராட்சிட்குட்பட்ட 15 வார்டுகளிலும் வார்டு (பகுதி) சபா கூட்டம் நடந்தது. அதன்படி பேரூராட்சிட்குட்பட்ட 1,3,4 ஆகிய வார்டுகளின் சபா கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கௌரி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகையன், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுகந்தி வரவேற்றார்.
கூட்டத்தின் சிறப்பு விருந்தி னராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து வார்டு (பகுதி) சபா கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களாக பெற்றுக் கொண்டார்.
இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி, அன்சர், பழனி, மணி, வைத்தீஸ்வரி, டேவிட், சங்கர் மற்றும்இளநிலை உதவியாளர் பன்னீர் செல்வம், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சோதனை
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
செங்கம் அடுத்துள்ள ஜவ்வாதுமலை மலை அடிவாரப் பகுதியில் குப்பநத்தம் மனை அமைந்துள்ளது. இந்த அணையில் நேற்று கோயம்புத்தூரில் இருந்து ஆய்வுக்காக பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் வந்து நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் அணையின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது செங்கம் தாசில்தார் முனுசாமி உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- 16 முறை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரம்
- போலீசார் சமாதானம்
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு தாலுகா எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவி இந்து மற்றும் மகன், தந்தை, தாய், பாட்டி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில்:-
நாங்கள் வசித்து வரும் வீட்டின் பட்டா உறவினர் பெயரில் பதிவாகி உள்ளது. அவர் பட்டாவை வேறு ஒருவர் பெயரில் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார். தவறாக பதிவாகியுள்ள பட்டாவை ரத்து செய்து எங்கள் வீட்டை அவரிடம் இருந்து மீட்டு தரக்கோரி இதுவரை 16 முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.
இதையடுத்து அவர்களை போலீசார் கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- 18.5 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன
- விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை:
பருவ மழை தொடங்கியதன் காரணமாக கலசப்பாக்கம் அருகே உள்ள மிருகண்டா அணையின் பாதுகாப்பு கருதி 65 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிரா மத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும் தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து சுமார் 40 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு உள்ளன. இதனால் அணையில் 18.5 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன. தற்போது அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 65 கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் அணையின் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






