search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    இடிக்கப்பட்ட கட்டிடங்களை சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு

    • புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என உறுதி
    • கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியை கதறி அழுதபடி புகார் செய்ததையடுத்து நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பெருமாள் கோயில் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது என தலைமை ஆசிரியர் சாந்தி, பேருராட்சி வார்டு சபா கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி அழுதபடி புகார் செய்தார்.

    இந்த சம்பவம் அனைத்து சமூக வலைத்திலும் பரவியது. இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில், கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டது.

    இதையடுத்து முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியை சாந்தியிடம், கட்டிடங்கள் குறித்து ஏன்? என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என வினவினார்.

    தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என தலைமை ஆசிரியரிடம் உறுதியளித்தார்.

    அப்போது ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், வழக்கறிஞர்வெ ங்கடேசன், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், பொருளாளர் சிந்தியா செல்வம், வார்டு கவுன்சிலர்கள் சுகுணாகுமார், சௌமி யாகமல், இளைஞணி ஏழுமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×