என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்டவலம் பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம்
    X

    வேட்டவலம் பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பற்கேற்பு.

    வேட்டவலம் பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம்

    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பற்கேற்பு
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    வேட்டவலம்:

    வேட்டவலம் பேரூராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி பேரூராட்சிட்குட்பட்ட 15 வார்டுகளிலும் வார்டு (பகுதி) சபா கூட்டம் நடந்தது. அதன்படி பேரூராட்சிட்குட்பட்ட 1,3,4 ஆகிய வார்டுகளின் சபா கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கௌரி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகையன், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுகந்தி வரவேற்றார்.

    கூட்டத்தின் சிறப்பு விருந்தி னராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து வார்டு (பகுதி) சபா கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களாக பெற்றுக் கொண்டார்.

    இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி, அன்சர், பழனி, மணி, வைத்தீஸ்வரி, டேவிட், சங்கர் மற்றும்இளநிலை உதவியாளர் பன்னீர் செல்வம், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×