என் மலர்
திருவண்ணாமலை
- கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தல்
- பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த டீ மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் இவர் 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் 3 அல்லது 4 ஆடுகள் தொடர்ந்து இறந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் 3 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தது. இது சம்பந்தமாக தெள்ளார் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து செம்மறி ஆடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இறந்த ஆட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆடு வளர்ப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது
- புதிய பணிகள் தொடங்க ஏற்பாடு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பழைய ரோட்டில் உள்ள மசூதி மற்றும் தனியார் பள்ளி காம்பவுண்ட் ஓரமாக கண்ணமங்கலம் ஏரிக்கால்வாய் செல்கிறது. இந்த ஏரிக்கால்வாய் வழியாக தோப்புக்காரா தெரு செல்லும் பழைய கல்வெட்டு பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் புகார் செய்ததன்பேரில் தற்போது பேரூராட்சி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கியது.
பழைய ரோட்டில் ஏரிக்கால்வாயில் பழுதடைந்த பகுதி உள்பட புதிய கல்வெட்டு அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியை திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஒலிம்பிக் கொடியேற்றினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்.
இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த 535 மாணவர்களும், 525 மாணவிகளும் கலந்துகொண்டனர். போட்டிகள் 14, 17, 19 வயதின் அடிப்படையில் நடைபெற்றது. 100 முதல் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
- அன்னாபிஷேக விழா 7-ந்தேதி நடைபெற உள்ளது.
- 7-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத ஆவணி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
அதனால் அன்னாபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வருகிற 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வருகிறது.. அன்றைய தினங்களில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 7 மற்றும் 8-ந் தேதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பவுர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 6-ந்தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-
கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள். 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
அங்கிருந்து பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.
வரும் பவுர்ணமி கிரிவலத்தை தீபத் திருவிழாவுக்கான ஒத்திகையாக பார்க்க வேண்டும். கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை உள்ளே அனுமதித்து, வெளியே செல்வதற்கான வழி தடத்தை இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும்.
தரிசனத்துக்கு ஒரு சிலரை நீண்ட நேரம் அனுமதிப்பதால், கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்றார்.
12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,692 சிறப்பு பஸ்கள் மூலம் 6,500 நடைகள் இயக்கப்பட உள்ளன.
மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல் நிகழ்வை விஐபிக்கள் தரிசிப்பதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்
- பணியினை விரைவாக முடிக்க அறிவுரை
ஆரணி:
ஆரணியில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவநிலை மழையால் ஆரணி நகராட்சி உட்பட்ட பல இடங்களில் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆரணி நகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் சத்தியமூர்த்தி சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் அடைப்பு சீரமைப்பு பணியை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனை தலைவர் ஏ.சி.மணி நேரில் சென்று ஆய்வு செய்து பணியினை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். இதில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி உடன் இருந்தார்.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளார்.
அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்காக ஏற்பாடு நடந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
- காலை 8 மணிக்கு மேல் கேட்டை மூடிவிடுவதாக புகார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்காடு சாலையில் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் கமிட்டியை நேற்று ஒ. ஜோதி எம்எல்ஏ திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பயறு வகை மற்றும் நெல்மணிகளை கொண்டு வந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சில விவசாயிகள் எம்எல்ஏவிடம் காலை 8 மணிக்கு மேல் கேட்டை மூடி விடுவதாகவும், பயறு வகைகளுக்கு குறைந்த பணம் கொடுக்கவே ஒரு வாரம் காலதாமதம் ஆகுவதாகவும், இந்த இதனை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு எம் எல் ஏஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி.ராஜி, ஒன்றிய செயலாளர்கள் ஞானவேலு, ரவிக்குமார், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், மங்கலம் பாபு, பார்த்திபன், ராம் ரவி, துரைசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு சூப்பர்வைசர் சதாசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சதாசிவம் இது குறித்து தூசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது மர்ம கும்பல் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.30,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக புகார்
செங்கம்:
செங்கம் நகரில் திருவண்ணாமலை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போளூர் சாலை, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரிகின்றது.
மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவிலேயே மாடுகள் படுத்து ஓய்வெடுப்பதால் வாகனங்கள் செல்ல வழி இல்லாத சூழல் நிலவுகிறது.
சாலையில் நடந்து செல்வோர் மீது பல சமயங்களில் மாடுகள் முட்டி மோதுகின்றது. இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர் என பலதரப்பட்ட மக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்து ஓய்வெடுப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளுக்கும், மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மாடுகளினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் அவ்வப்போது பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் மாடுகளை பிடிப்பதும் மீண்டும் உரிமையாளர்கள் மாட்டினை மீட்டு சென்று அதனை சாலையிலேயே மீண்டும் விட்டு விடுவதும் செங்கம் பகுதியில் வாடிக்கையாகி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து செல்ல வேண்டும் எனவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதியில் உள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.
- சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
- வனத்துறை அதிகாரிகள் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகில் நாடானூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லாத்தூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட சீத்தாப்பழங்களை அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த வனகாப்பாளர் ஒருவர் சீத்தாப்பழம் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் ரூ.1,000 கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், மலை வாழ்மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் நான் சீத்தாப்பழத்திற்கு பணம் கேட்கவில்லை.
அதன் மேலே போட்டு வைத்து உள்ள இலைகளை வனப்பகுதியில் இருந்து எடுத்துள்ளீர்கள். அதற்கு தான் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.
சில நிமிடங்களில் நான் அபராதம் போட்டால் கட்டமாட்டீங்களா என்று கேட்டப்படி அவர் வாகனத்தில் சாராயம் கடத்துவதாக எனக்கு புகார் வந்து உள்ளது என்று கூறி சீத்தாப்பழம் லோடை கீழே இறக்கும் படி கூறினார். இதுவரைக்கும் நாங்கள் சீத்தாப்பழத்துக்கு யாருக்கும் பணம் கொடுத்தது இல்லை.
உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று மலை வாழ்மக்களும் கண்டிப்புடன் பேசினர். இந்த உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வன ஊழியரை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெளியில் சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த மூளகிரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. இவர் அப்பகுதியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சின்ன பொண்ணு வேலை சம்பந்தமாக வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்ததார்.
நேற்று பெய்த கன மழையால் ஓட்டு வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து அனாக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






