என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canal blockage"

    • நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்
    • பணியினை விரைவாக முடிக்க அறிவுரை

    ஆரணி:

    ஆரணியில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவநிலை மழையால் ஆரணி நகராட்சி உட்பட்ட பல இடங்களில் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆரணி நகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டன.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் அடைப்பு சீரமைப்பு பணியை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதனை தலைவர் ஏ.சி.மணி நேரில் சென்று ஆய்வு செய்து பணியினை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். இதில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி உடன் இருந்தார்.

    ×