என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alignment of inscriptions"

    • ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது
    • புதிய பணிகள் தொடங்க ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பழைய ரோட்டில் உள்ள மசூதி மற்றும் தனியார் பள்ளி காம்பவுண்ட் ஓரமாக கண்ணமங்கலம் ஏரிக்கால்வாய் செல்கிறது. இந்த ஏரிக்கால்வாய் வழியாக தோப்புக்காரா தெரு செல்லும் பழைய கல்வெட்டு பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

    இதனை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் புகார் செய்ததன்பேரில் தற்போது பேரூராட்சி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கியது.

    பழைய ரோட்டில் ஏரிக்கால்வாயில் பழுதடைந்த பகுதி உள்பட புதிய கல்வெட்டு அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது.

    ×