என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தவாசி-திண்டிவனம் சாலையில் பெண்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி.
வந்தவாசி-திண்டிவனம் சாலையில் கிராம மக்கள் மறியல்
- கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதாக புகார்
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் வேடப்பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொதுமக்கள் நாள்தோறும் வணங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து வேடப்பாளையத்தம்மன் கோவிலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடிக் கொண்டு கோவிலுக்கு வருபவர்களை ஆபாசமாக பேசுவதாகவும், கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்க மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக பலமுறை தாசில்தார் அலுவலகத்திலும், காவல் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கோவிலை சொந்தம் கொண்டாடி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வந்தவாசி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
இதனால் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






