என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கையுந்து பந்து மகளிர் அணி தேர்வு
    X

    கையுந்து பந்து மகளிர் அணி தேர்வு

    • சென்னையில் 27-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தமிழ்நாடு மாநில கையுந்து பந்து மகளிர் அணிக்கான தேர்வு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேலோ இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இளை யோர் சுழற்சி கையுந்து பந்து போட்டிகள் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நவம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற வுள்ளது.

    இப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு மாநில கையுந்து பந்து மகளிர் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளை யாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளன.

    இதில் பங்கேற்கும் வீராங்கனைகள், 01-01-2004-ம் தேதி அன்று அல்லது அதற்கு பின்பு பிறந்திருக்க வேண்டும். ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், மற்றும் இருப்பிட சான்றிதழ், ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயணப்படி வழங்கப்படாது.

    மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தின் 04175 - 233169, 74017-03484 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×