என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cut throat and half-naked"

    • குடும்பத்தை தரக்குறைவாக பேசியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 42), மும்பை ெரயில் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் ரவீந்திரன் அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு அரை நிர்வாணத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    கொலையாளியை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்கம் சின்ராஜ், திருவண்ணாமலை குணசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (26) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 15-ந்தேதி இரவு நானும், ரவீந்திரனும் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர், என்னையும், குடும்பத்தையும் தரக்குறைவாக பேசினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரை கீழே தள்ளி தகர சீட்டால் கழுத்தை அறுத்து, கீழே கிடந்த கல்லை அவர் மீது போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன் என்று அவர் போலீசாாிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×