என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மாணவர்களின் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என பாராட்டு
    • மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம்

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அ. நளினி வருகைதந்து பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளித் தலைமை ஆசிரியைதாமரைச்செல்வி, ஓய்வு ராணுவ வீரர் க.பிரபாகரன் பி.டி.ஏ. ஆசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மேலும் பள்ளி முழுவதையும் பார்வையிட்டு பள்ளி வளாகம், கை கழுவும் அறை, தோட்டம், கழிவறை, சத்துணவு மாணவர்களின் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என பாராட்டி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார்.

    பின்னர் பள்ளி வளாகத்தில் அசோக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

    • திருவண்ணாமலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது
    • அதிகாரிகள், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

    வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசுகையில்:-

    தீபத் திருவிழாவையொட்டி ஆட்டோவுக்கு பயண கட்டணம் நிர்ணயிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது.

    பாதி ஆட்டோக்களுக்கு மேல் உரிமம் இல்லாமல் இயக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஓட்டுநர்கள் ஆட்டோக்களுக்கு உரிய அனைத்து ஆவணங்களையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி செல்ல வேண்டும்.

    இந்த ஸ்டிக்கர் உள்ள ஆட்டோக்கள் மட்டும்தான் தீபத் திருவிழாவின் போது இயக்க வேண்டும். கடந்த தீபத் திருவிழாவின் போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் இந்த முறையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

    கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் பொன்.சேகர், திருவண்ணாமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமாரி, சப்- இன்ஸ்பெக்டர் அன்புசெல்வம், மோகன், அமைப்புசாரா அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் ஆர்பெரியசாமி நன்றி கூறினார்.

    • மாணவர்கள், பொதுமக்கள் அவதி
    • சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த இரும்புலி சுற்றிலும் மலை சூழ்ந்த கிராமம் ஆகும். இவ்வூருக்கு வேலூரில் இருந்து ரெட்டிபாளையம் கிராமம் நகர பஸ் இயக்கப்படுகின்றன. ஆனால் இரும்புலி கிராமம் செல்லும் ரோட்டில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது.

    இதனை சீரமைக்க பலமுறை அப்பகுதி மக்கள் புகார் செய்தும் மின் வாரியத்தினர் சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இவ்வூருக்கு வரும் பஸ் வராமல் பாதியிலேயே திரும்பிச் செல்கிறது.

    இதனால் இரும்புலி கிராமத்திலிருந்து பொதுமக்கள், மாணவ மாணவிகள் யாரும் எங்குமே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி, துணைத்தலைவர் ஆர்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3.10 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு 4 மாதங்களாகிறது. ஆனால் அந்த கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கும்போது, அதுகுறித்த முழு விவரம் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை என்று ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.சக்திவேல் புகார் தெரிவித்து பேசினார்.

    இந்த நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த கீழ்சாத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாம்பட்டு அண்ணா நகர் இளைஞர்கள் சிலர், எதுவும் எழுதப்படாத வெற்று வெள்ளைத் தாளை மனுவாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தியிடம் வழங்கினர்.

    அப்போது, மாம்பட்டு அண்ணா நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரேசன் கடை கட்டிடம், துணை சுகாதார நிலையக் கட்டிடம் ஆகியவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், மனு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும், இப்போது வெற்று வெள்ளைத் தாளை நாங்கள் மனுவாக அளிக்கிறோம் என்றனர்.

    இதையடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை எடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

    • திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நடந்தது
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.

    • ரூ.15 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது
    • பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு விளையாட்டு பாட வேளையில், விளையாட தேவையான ரூ.15 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு பொருட்கள் பிடிஏ மற்றும் எஸ்எம்சி சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் தலைமை ஆசிரியர் பாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்
    • 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் சாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் கோவில் வளா கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தை போலீஸ் டி.ஐ.ஜி. சத்ய பிரியா ஆய்வு செய்து விட்டு வந்தவாசியில் உள்ள சத்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோலுக்கு வந்தார்.

    அன்னாபிஷேகத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி. சத்ய பிரியா (பொறுப்பு) சாமி தரிசனம் செய்து கோவிலை சுற்றி வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை தீபத்திற்கு கடந்த முறை 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மகா தீபத்திற்கு சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அழிஞ்சில் பட்டு துணை மின் நிலையத்தில் 2 கோடி மதிப்பீட்டில் 25 மெகாவாட் மின்மாற்றியை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் செய்யாறு ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்றார். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி,ராஜு, வெம்பாக்கம் ஒன்றிய குழு துணை தலைவர் நாகம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று மாலை வரை பவுர்ணமி உள்ளது.
    • மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிறுவர் முதல் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிதவித்தனர். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.

    மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • தென்மாத்தூரில் நடந்தது
    • அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா தென்மாத்தூர் வருவாய் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் இன்று நடந்தது. இதை யொட்டி பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    • கிராம மக்கள், மாணவர்கள் அவதி
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தை அடுத்துள்ள இரும்பிலி கிராமத்திற்கு வேலூரில் இருந்து ரெட்டிபாளையம் கிராமம் வரை டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இரும்பிலி கிராமம் செல்லும் ரோட்டில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனை சீரமைக்க பலமுறை அப்பகுதி மக்கள் புகார் செய்தும் மின் வாரியத்தினர் சீரமைக்காமல் உள்ளனர்.

    இதனால் இரும்பிக்கு வரும் பஸ்கள் பாதியிலேயே திரும்பி செல்கிறது. இரும்பிலி கிராமத்தில் இருந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வெளிபகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஓ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடமும் திறக்கப்பட்டது

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, வடமன பாக்கம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கி வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரய்யார் ஜோதி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பகுதி ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    இதேபோல் வெம்பாக்கம் ஆதிதிராவிட குடியிருப்பு காலணியில் பகுதி நேர ரேஷன் கடையை ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ரூபாய் 15 லட்சத்துக்கு 27 ஆயிரம் மதிப்பில் வடமணப்பாக்கம் கிராம ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும் அவர் திறந்து வைத்தார்.

    ×