லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நடந்ததுபக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் முன்பு திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்ட காட்சி. (அடுத்த படம்) 2-வது நாளாக இன்று காலை பக்தர்கள் கிரிவலம் சென்ற போது எடுத்த படம்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் முன்பு திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்ட காட்சி. (அடுத்த படம்) 2-வது நாளாக இன்று காலை பக்தர்கள் கிரிவலம் சென்ற போது எடுத்த படம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.

மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com