என் மலர்
நீங்கள் தேடியது "கல்வி அதிகாரி ஆய்வு"
- மாணவர்களின் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என பாராட்டு
- மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அ. நளினி வருகைதந்து பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளித் தலைமை ஆசிரியைதாமரைச்செல்வி, ஓய்வு ராணுவ வீரர் க.பிரபாகரன் பி.டி.ஏ. ஆசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் பள்ளி முழுவதையும் பார்வையிட்டு பள்ளி வளாகம், கை கழுவும் அறை, தோட்டம், கழிவறை, சத்துணவு மாணவர்களின் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என பாராட்டி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் அசோக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.






