என் மலர்
திருவண்ணாமலை
- வேலூரை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (29) திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. தகவலின் பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கஜேந்திரன் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து காவலில் வைத்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமியை போலீசார் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
- வனத்துறையினர் அதிரடி
- திருவண்ணாமலை கவுத்திமலை காப்பு காடு பகுதியில் இறந்து கிடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கவுத்திமலை காப்பு காட்டில் எலிமருந்து வைத்து 5 பெண் மயில்கள் கொல்லப்பட்டு உள்ளதாக திருவண்ணா மலை வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவலல் கிடைத்தது.
அவரது தலைமையிலான வனத்துறையினர் கவுத்திமலை காப்பு காடு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது காப்பு காட்டையொட்டி நிலம் வைத்துள்ள படூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 30) என்பவரது நிலத்தில் சோதனை நடத்தியதில் 5 பெண் மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் நிலத்தின் உரிமையாளர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவரது நிலத்தில் உள்ள பயிர்களை மயில்கள் சேதப்ப டுத்துவதால் அதனை கட்டுப்படுத்த நெல்லில் எலி மருந்து கலந்து வைத்த தாக தெரிவித்து உள்ளார். மேலும் இறந்த பெண் மயில்களின் உடலை வனத்துறையி னர் பறிமுதல் செய்தனர்.
- நகரின் வெளிப்புற காட்டு பகுதியில் விட்டனர்
- பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் நாய்கள் அதிகரித்து காணப்பட்டன.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நாள்தோறும் அச்சத்தில் சென்று வந்தனர். நாய்களின் அச்சுறுத்தல் குறித்து நகர மன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதேபோல் தற்போது ஒவ்வொரு வார்டாக நடைபெற்று வரும் பகுதி சபா கூட்டங்களிலும் பொதுமக்கள் நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் ஆலோசனையின்படி நேற்று நகராட்சி எல்லைக் குட்பட்ட வார்டு 1 மற்றும் 2ல் ஆற்காடு சாலை, ஆரணி சாலை, அனுமந் தன்பேட்டை, பஸ் நிலையம் பகுதிகளில் துப்புரவு அலுவலர் வை.சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் கு.மதனராசன் ஆகியோர் மேற்பார்வையில் சுற்றித்தி ரிந்த 45 நாய்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து நகரின் வெளிப்புறம் உள்ள காட்டில் விட்டனர்.
இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டது
- விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை குறித்து மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று பேரூராட்சி ஊழியர்கள் செங்கம் பகுதியில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடித்தனர்.
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, மெயின் ரோடு, போளூர் ரோடு, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, தளவாநாயக்கன்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டது.
மேலும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் மீண்டும் மாடுகள் சாலைகளில் சுற்றுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இனிவரும் காலங்களில் சாலைகளில் சுற்றும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செங்கம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பேச்சு
- இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது
செய்யாறு:
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் சையத் சுலைமான் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் என்.வி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது, தமிழக அரசு தமிழக முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த மாணவ மாணவிகளின் திறனை அறிந்து பல்வேறு நிறுவனங்கள் மூலம் 3 மாதம் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது.
பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்று நீங்கள் அனைவரும் வேலை வாய்ப்பினை பெற வேண்டும். தமிழக முழுவதும் இளைஞர்கள்அ னைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி வளர்ச்சி பெற்ற தமிழகம் உருவாக நம்முடைய முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்.
இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள், மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபால கிருஷ்ணன், வழக்கறிஞர் பாஷா, நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கார்த்திகேயன், கங்காதரன், திமுக இளைஞரணி துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
- மின் கசிவு காரணமாக தீ பிடித்திருப்பதை கண்டு மின்சாரத்தை துண்டித்தனர்
வந்தவாசி:
வந்தவாசி பஜார் வீதியில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடையின் உரிமையாளர் வியாபாரத்தை முடித்துக் கொண்டு பேக்கரியை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இன்று காலை பேக்கரியை திறக்க வந்தார். கடையை திறந்தபோது உள்ளே புகை மூட்டமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வந்தவாசி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக தீ பிடித்திருப்பதை கண்டு மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடை மூடி இருந்ததால் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வந்தவாசி பஜார் வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் சப் இன்ஸ்பெக்டர் அரசு, மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடுக்கனூர், செய்யாற்று படுகை அருகே 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.
போலீசார் வருவதை கண்டவுடன் 3 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதில் மேல்மட்டை விண்ணமங்கலம் புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று ஏற்படுவதாக புகார்
- விதிமுறைகள் பின்பற்றபடுகின்றதா? என விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த அரிசி ஆலைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன.
அரிசி ஆலைகளிலிருந்து கரும்புகை நச்சு துகள் மற்றும் தூசி வெளியேறுவதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகின்றது.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மற்றும் மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தோம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ராட்டினமங்கலம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் அரிசி ஆலைகளில் இருந்து வரும் கரும்புகை துகள்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி ஆரணி ராட்டினமங்கலம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுபாடு வாரிய இணை இயக்குநர் கதிர்வேல் தலைமையில் அதிகாரிகள் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள அரிசி ஆலைகளில் திடீரென ஆய்வு மேற்கொ ண்டனர்.
இதில் கருப்புகை தூசிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றதா மற்றும் மாசுகட்டு ப்பாடு வாரிய விதித்த விதிமுறை களை பின்பற்றுகி ன்றதா என பல்வேறு கோணத்தில் ஆய்வு மேற்கொ ண்டனர்.
- அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
போளூர் ஒன்றியத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கட்டிடம் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
போளூர் ஒன்றியம் வெள்ளூர் கிராமத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான மையம் செயல்பட்டு வந்தன.
தற்போது அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் போளூர் புறவழிச்சாலை ஆர். குன்னத்தூர் பகுதியில் மக்கள் சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி பாதுகாப்பு சார்பில் இப்பயிற்சி மையம் தொடங்க விழா நடைபெற்றது.
விழாவில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் போளூர் ஒன்றியத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வெள்ளூர் கிராமத்தில் தசை சிதைவு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர சிகிச்சைகள் எதுவும் இல்லை ஆனால் அவர்களுக்கு உரிய பயிற்சி மட்டும் அளிக்க முடியும் இதற்காக தேவையான உபகரணங்களை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான பயிற்சி உபகரணங்களை வழங்கினார்.
இதன் மூலம் போளூர் தொகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
தற்போது அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் இவை தற்காலிகமாக போளூர் பைபாஸ் சாலையில் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பயிற்சி மையத்திற்கு தேவையான கட்டிடம் கட்டுவதற்காக போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்ட உள்ளன இதன்மூலம் போளூர் தொகுதியில் உள்ள தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைவார்கள் என பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, கல்வி வளர்ச்சி பாதுகாப்பு நிறுவனர் குமரவேல் ஊராட்சி மன்ற தலைவர் தீபா கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவிலை சுற்றி சாமி வீதி உலா
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
போளூர்:
போளூர் நற்குன்றம் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை நடைபெற்றது. காலையில் முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணி அளவில் முருகர் (உற்சவர்) வள்ளி, தெய்வானை உடன் கோவிலை சுற்றி வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.
விழாவிற்கு தர்மகர்த்தா செல்வம் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியன், மண்ணு, சண்முகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- கோவிலில் பாடம் கற்கும் மாணவர்கள்
- பள்ளி கட்டிடத்தை விரைந்து கட்ட ெபற்றோர்கள் வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப்பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த வாரம் இடிக்கும் பணி தொடங்கியது.
தற்போது வகுப்பறைகள் இல்லாத நிலையில் இங்கு படிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கடந்த 7-ம்தேதி முதல் வகுப்புகள் அருகே உள்ள பெருமாள் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அருகருகே வகுப்புகள் நடத்தப்பட்டது.
பகலில் அங்கன்வாடி மையத்தில் மாணவ மாணவிகள் மதிய உணவு (பழைய கட்டிடத்தில்) வழங்கப்பட்டது. கண்ணமங்கலம் இந்து ஆரம்பப் பள்ளியை விரைந்து கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைவதாக புகார்
போளூர்:
போளூர் அருகே வசூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் கடலூரில் இருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இதன் எதிரில் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக உள்ளது. ஏற்கனவே அந்த பகுதி வளைவான பகுதியாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
செல்லியம்மன் கோவிலுக்கு செல்லும் மக்களும் அந்த இடத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






