என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தவாசி பஜார் வீதியில் பேக்கரியில் தீ விபத்து
- தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
- மின் கசிவு காரணமாக தீ பிடித்திருப்பதை கண்டு மின்சாரத்தை துண்டித்தனர்
வந்தவாசி:
வந்தவாசி பஜார் வீதியில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடையின் உரிமையாளர் வியாபாரத்தை முடித்துக் கொண்டு பேக்கரியை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இன்று காலை பேக்கரியை திறக்க வந்தார். கடையை திறந்தபோது உள்ளே புகை மூட்டமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வந்தவாசி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக தீ பிடித்திருப்பதை கண்டு மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடை மூடி இருந்ததால் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வந்தவாசி பஜார் வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






