என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் வைத்து மயில்களை கொன்ற வாலிபர் கைது
    X

    கொல்லபட்ட மயில்களையும் கைதானவரையும் படத்தில் காணலாம்.  

    விஷம் வைத்து மயில்களை கொன்ற வாலிபர் கைது

    • வனத்துறையினர் அதிரடி
    • திருவண்ணாமலை கவுத்திமலை காப்பு காடு பகுதியில் இறந்து கிடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கவுத்திமலை காப்பு காட்டில் எலிமருந்து வைத்து 5 பெண் மயில்கள் கொல்லப்பட்டு உள்ளதாக திருவண்ணா மலை வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவலல் கிடைத்தது.

    அவரது தலைமையிலான வனத்துறையினர் கவுத்திமலை காப்பு காடு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது காப்பு காட்டையொட்டி நிலம் வைத்துள்ள படூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 30) என்பவரது நிலத்தில் சோதனை நடத்தியதில் 5 பெண் மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் நிலத்தின் உரிமையாளர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவரது நிலத்தில் உள்ள பயிர்களை மயில்கள் சேதப்ப டுத்துவதால் அதனை கட்டுப்படுத்த நெல்லில் எலி மருந்து கலந்து வைத்த தாக தெரிவித்து உள்ளார். மேலும் இறந்த பெண் மயில்களின் உடலை வனத்துறையி னர் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×