என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • நிலத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சொர்ணம் (வயது 38).

    இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் இவர் நேற்று காலை வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற சென்றார்.

    தொடர் மழை காரணமாக சொர்ணம் குடை பிடித்துக் கொண்டு வயலில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இடியுடன் கனமழை பெய்து.

    இதில் திடீரென இடி தாக்கியதில் சொர்ணம் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் தெள்ளார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சொர்ணம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிதாக பாலம் அமைக்கப்பட்டதால் பாதிப்பு இல்லாமல் தண்ணீர் செல்கிறது
    • ெபாதுமக்கள் மகிழ்ச்சி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவண்ணாமலை வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுகின்றன.

    இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு பொய்த கனமழையில் சாலையின் முழுவதும் தண்ணீர் சென்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன.

    இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து தற்போது புதிதாக பாலம் மற்றும் பக்க கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் தற்போது வெளியேறும் தண்ணீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் ஜெயசுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.
    • மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது27). இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வந்தார்.

    அப்போது அதே மருத்துவமனையில் சென்னை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் எலக்ட்ரீஷனாக பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா கருவுற்ற நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

    தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்திற்கு ஜெயசுதா வந்தார். பின்னர் ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு கள்ளக்காதலியான ஜெயசுதாவுடன வாழ்ந்து வந்தார். மற்றும் ஜெயசுதாவின் குழந்தையுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.

    மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தினந்தோறும் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை தாக்கியும் கொடுமைபடுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    மேலும் கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை கட்டையால் தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இச்சம்பவம் குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது
    • வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

    வந்தவாசி:

    தமிழகத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளான சென்னாவரம், நடுக்குப்பம்,தெள்ளார், வெண்குன்றம், மாம்பட்டு, மருதாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது வீட்டின் மாடியில் பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது.

    இதில் மாடியில் இருந்த சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருக்கும் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    •  போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • குற்றம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் பதிவேற்றி பாதுகாக்க பயன்படும்

    திருவண்ணாமலை:

    தமிழக காவல் துறையில் புதிதாக 'ஸ்மார்ட் காவலர் இ- பீட்' முறையானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி திருவண்ணாமலை டவுன், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி, செய்யாறு, செங்கம், ஆரணி டவுன் ஆகிய போலீஸ் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் இ- பீட் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    குற்றம் நடைபெறமால் தடுக்க ரோந்து செல்லும் போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த  போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புதிதாக செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் இரவு மற்றும் பகல் ரோந்து செல்லும் போலீசார் ஸ்மார்ட் காவலர் என்ற செல்போன் செயலியில் தனது ரோந்து பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம், வங்கி, பூட்டிய வீடுகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கு சென்று தணிக்கை செய்யும் போது அதன் விவரங்களை ஆன்லைன் முறையில் இந்த செயலியின் மூலமாக பதிவேற்றம் செய்வர்.

    குற்றம் நடைபெறும் இடங்கள் மேலும் அவரவர் சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்கள், வரலாற்று பதிவேடு குற்றவாளிகள், சந்தேக நபர்கள் ஆகியோர்களின் நடவடிக்கைகளை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கலாம்.

    போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியாக விளங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் கண்காணித்து போலீசாருக்கு அவ்வபோது உத்தரவுகளை பிறப்பித்து தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.

    எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி குற்றம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள், மூத்த குடிமக்கள் தனியார் வசிக்கும் வீடுகள் மற்றும் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது பூட்டிய வீடுகள் பற்றிய விவரங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து சென்றால் அவ்விடங்கள் பற்றிய விபரங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பு உறுதிபடுத்தப்பட்டு குற்றம் நடைபெறமால் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 9 ஷட்டர்கள் வழியாக பாய்கிறது
    • ஆற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    தற்போது அணையில் 116.30 அடி அளவிற்கு அதாவது 6 ஆயிரத்து 722 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழையாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 240 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது.

    அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்பகுதியில் உள்ள 9 ஷட்டர்கள் வழியாக 3,440 கன அடி தண் ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் சீறிப்பாய்ந்து விழுவதை சுற்றுலா பயணிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    இதனால் தென்பென்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் நந்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி, (வயது, 70) விவசாயி.

    இவர் நந்தியவாடி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது சேத்துப்பட்டு ஆரணி சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் பழனி, மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரதேபரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் பழனி, வைத்திருந்த டைரியில் இருந்த செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் மாடுகளை பிணமாக மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு ஈசன் கால்வாய் ரெட்டியார் கொட்டகை பகுதியில் விவசாய நிலம் உள்ளன. இவருக்கு சொந்தமாக 2 மாடுகள் உள்ளது.

    நேற்று ஆரணி பகுதியில் கன மழை காரணமாக தனது விவசாய நிலத்திலேயே 2 மாடுகளை கட்டி விட்டு சென்றுள்ளார்.

    மேலும் இன்று காலையில் மாடுகளை கட்டி வைத்த இடத்திற்கு வந்து பார்த்தபோது 2 மாடுகள் மாயமானதால் பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை இதனையடுத்து தனது நிலத்தில் உள்ள கிணற்றை பார்த்தபோது 2 கறவை மாடுகள் இறந்து கிடப்பது தெரிய வந்தன.

    பின்னர் தகவலறிந்து வந்த ஆரணி தீயணைப்புத் துறையினர் பிணமாக கிடந்த மாடுகளை மீட்டனர்.

    இதில் இறந்து கிடந்த 2 கறவு மாடுகளின் நான்கு கால்களிலும் கயிறு கட்டி கிண்றில் தள்ளப்பட்டதை கண்டு விவசாயி மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது
    • தீப திருவிழாவுக்கு முன்பு சீரமைக்க வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் மந்தகதியாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக செங்கம் அருகே உள்ள முறையாறு, கரியமங்கலம், கொட்டகுளம், மண்மலை உள்ளிட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தற்போது வரை மெத்தனமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக மண்மலை மற்றும் கரியமங்கலம் பகுதிகளில் நீர் வழி கால்வாய்கள் மீது சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கரியமங்கலம் பகுதியில் சிறிய பாலம் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண் கொண்டு மூடப்பட்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக தற்காலிகமாக மண் போட்டு மூடப்பட்ட இடத்தில் சரக்கு ஏற்றி வந்த லாரி நேற்று சிக்கிக் கொண்டது.

    இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சேற்றில் சிக்கிக்கொண்ட லாரி மீட்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தீபத் திருவிழா நெருங்கிவரும் சூழலில் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சூழல் உள்ளது.

    எனவே இந்த சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிலத்தில் வெண்டைக்காய் பறித்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். அவரது மனைவி அங்கயற்கன்னி (வயது 33). இவர், நிலத்தில் வெண் டைக்காய் பறித்து கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக தெரிகிறது.

    இதில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அங்கயற் கன்னி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருவண்ணாமலையில் அடுத்த மாதம் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
    • 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள தீபத்திருவிழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு, தீபத்திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற உள்ளது.

    எனவே, தீபத்திருவிழாவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதொடர் பாக, கலெக்டர் தலைமை யில் ஏற்கனவே 2 கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. மேலும், வடக்கு மண்டல ஐஜி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடி ஆய்வும் செய்யப்பட்டது. அதன்தொடர்ச்சி யாக, தீபத்திருவிழா முன் னேற்பாடுகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் அடுத்த வாரம் நேரடி ஆய்வு நடத்ததிட்டமிட்டுள்ளனர்.

    இந்தநிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சுவாமி திருவீதி யுலா வாகனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்ததால், அவற்றைசீரமைத்து புது வண்ணம் தீட்டப்படு கிறது. வாகனங்களின் உறு தித்தன்மையை மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.

    அதன்படி, தீபத்திரு விழாவின் 6ம் நாளான்று காலை உற்சவத்தின்போது மாட வீதியில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடைபெறும். நாயன்மார்கள் வீதியுலாவுக்கு மார்கள் வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் 63 வாகனங்களையும் புதுப் பித்து, வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    விழாவின் 7ம் நாளான்று மாட வீதியில் வலம் வரும் பஞ்ச ரதங் களும் ஏற்கனவே சீரமைக் கப்பட்டு, அந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. குறிப்பாக, சுப் பிரமணியர் தேர் முற்றிலுமாக பழுதுபார்க்கப்பட் டுள்ளன.

    தேர் பீடத்தின் மேற்பகுதி முழுவதும் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. எனவே, சுப் பிரமணியர் தேர் மட்டும் விரைவில் வெள்ளோட் டம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் புதுப்பாளையம் ஒன்றியத்தில் சீரமைக்கப்படாமல் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. தீர்மா னங்களை உதவியாளர் ரவி வாசித்தார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் சசிகலா உதயசேகரன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தர பாண்டியன், முனியப்பன், பவ்யாஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், பொறியாளர் குமார் உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×