என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைப்பது"
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் புதுப்பாளையம் ஒன்றியத்தில் சீரமைக்கப்படாமல் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. தீர்மா னங்களை உதவியாளர் ரவி வாசித்தார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் சசிகலா உதயசேகரன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தர பாண்டியன், முனியப்பன், பவ்யாஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர், பொறியாளர் குமார் உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






