என் மலர்
நீங்கள் தேடியது "வேங்கிக்கால் ஏரி நிரம்பியது"
- புதிதாக பாலம் அமைக்கப்பட்டதால் பாதிப்பு இல்லாமல் தண்ணீர் செல்கிறது
- ெபாதுமக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவண்ணாமலை வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுகின்றன.
இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு பொய்த கனமழையில் சாலையின் முழுவதும் தண்ணீர் சென்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன.
இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து தற்போது புதிதாக பாலம் மற்றும் பக்க கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வெளியேறும் தண்ணீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






