என் மலர்
திருவண்ணாமலை
- ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது.
- மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி புவனேஸ்வரில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
அந்த அணி 9வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி உள்ளூரில் விளையாடுவதால் வெற்றிக்கு போராடும்.
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
அன்னதானம் வழங்கும் திட்டம் தமிழக சட்டசபையில் 2022-23-ம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது கடந்த மே மாதம் நடந்தது.
அப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் குளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தவுடன் பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது குறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், ''நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமான காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இந்த நாள் முழுவதும் அன்னதான பணிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சமையல், பரிமாறுதல் போன்றவற்றிக்காக 60 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்'' என்றனர்.
- புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு போளூரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அதேபோல் தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொதுமக்கள் கேக் வெட்டியும் இனிப்பு கொடுத்தும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
- ரோந்து சென்ற போது சிக்கினார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு ரகளை செய்தார். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தார். ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தரணி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 10 பாக்கெட்டுகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ரகிமான்பேட்டையை சேர்ந்த 85 வயது மூதாட்டி தனது வீட்டின் பின்புறம் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி 10 பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உண்டியல் உடைத்து துணிகரம்
- கண்காணிப்பு கேமரான காட்சிகள் ஆய்வு
ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம்போல் காலையில் பூஜை செய்துவிட்டு இரவு பூசாரி கோவில் நடையை சாத்தி விட்டு சென்றார்.
பின்னர் காலையில் கோவில் திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது .
இதே போல ஆரணி வந்தவாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக புகார்
- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கலசபாக்கம்:
கலசபாக்கம் அருகே மேப்பதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினி வேனில் ஆட்களை அழைத்துக் கொண்டு காஞ்சியை அடுத்த நம் மியந்தல் வழியாக மாதிமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டி ருந்தார்.
அப்போது நம்மியந்தல் கிராமத்தில் சாலையின் ஓரம் கரும்பு ஏற்றிக் கொண்டிருந்த லாரியை கடந்து சென்ற போது தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து ராஜூ கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பவுலின்ராஜ், சகாதேவன், லூர்துராஜ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் மற்றொரு தரப்பினர் போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதை கண்டித்து நம்மியந்தல் கூட்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புகார் அளித்தால், விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 70 பேருக்கு சீர்வரிசை வழங்கினர்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெரணமல்லூர், வட்டார கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வேணிஏழுமலை, தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், துணைத் தலைவர் லட்சுமி லலிதா வேலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்டதிட்ட அலுவலர் கந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார திட்ட அலுவலர் ரேவதி, வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சீர்வரிசை பொங்கல் 70 கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, குழந்தைகள் வட்டார கண்காணிப்பாளர் சிவகுமார், மேற்பார்வையாளர்கள் முத்தழகி, மகேஸ்வரி, அலமேலு, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி மேல்வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 30). இவர்களுக்கு யாஷிகா (4) என்ற மகள் உள்ளார்.
ஜான்சிராணி சென்னை அம்பத்தூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
- மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை
திருவண்ணாமலை:
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர். திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்களை மத்திய அரசின் சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வ ராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் வியாஸ், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த மிக்கியா லெப்சான் கொண்ட மருத்துவ க்குழுவினர்
ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 93.46 மதி
ப்பெண்கள் பெற்று மேல்வில்வ ராயநல்லூர் சுகாதார நிலையம் முதலிடம் பெற்றது.
இங்கு அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாடு உள்ளதாக தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கை மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரத்த வங்கி, கூடுதல் கட்டிடம், அறுவை சிகிச்சை மையம், கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படஉள்ளது.
இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு வசதிகள் செய்து தருவதன் மூலம் மேல்வில்வராயநல்லூர். மேலாரணி, சேங்கபுத்தேரி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தனி யார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 87), விவசாயி. இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
பச்சையப்பன் மூட்டு வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனடியாக அவரது மகன் ஏகாம்பரம் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையின் குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதி விபத்து
- கன்னியாகுமரியை சேர்ந்தவர்
வந்தவாசி:
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டத்துக்குட்பட்ட கல்லக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை போவாஸ் . இவரது மனைவி அஜந்தா (வயது 48). இவர் வந்தவாசியில் உள்ள தனது மகள் கிரேஸ்லினை பார்க்க கன்னியாகுமரியில் இருந்து பஸ்சில் மேல்மருவத்தூருக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். அவரை அங்கிருந்து மருமகன் ரமேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வந்தவாசிக்கு வந்து கொண்டிருந்தார்.
வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அஜந்தா நிலைத்தடு மாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து துரை போவாஸ் அளித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






