கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

70 பேருக்கு சீர்வரிசை வழங்கினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
Published on

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெரணமல்லூர், வட்டார கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வேணிஏழுமலை, தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், துணைத் தலைவர் லட்சுமி லலிதா வேலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்டதிட்ட அலுவலர் கந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார திட்ட அலுவலர் ரேவதி, வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சீர்வரிசை பொங்கல் 70 கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, குழந்தைகள் வட்டார கண்காணிப்பாளர் சிவகுமார், மேற்பார்வையாளர்கள் முத்தழகி, மகேஸ்வரி, அலமேலு, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com