என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருதரப்பினர் மோதலால் சாலை மறியல்
- போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக புகார்
- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கலசபாக்கம்:
கலசபாக்கம் அருகே மேப்பதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினி வேனில் ஆட்களை அழைத்துக் கொண்டு காஞ்சியை அடுத்த நம் மியந்தல் வழியாக மாதிமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டி ருந்தார்.
அப்போது நம்மியந்தல் கிராமத்தில் சாலையின் ஓரம் கரும்பு ஏற்றிக் கொண்டிருந்த லாரியை கடந்து சென்ற போது தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து ராஜூ கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பவுலின்ராஜ், சகாதேவன், லூர்துராஜ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் மற்றொரு தரப்பினர் போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதை கண்டித்து நம்மியந்தல் கூட்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புகார் அளித்தால், விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






