என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் வழஙகப்பட்டது.முடிவில் இளநிலை உதவியாளர் வீரமணி நன்றி கூறினார்.

    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த மேல்நகர் கிராமத்தில் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகளின் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி பொங்கல் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரத்னாஅன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    • திருவண்ணாமலை கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
    • திருஊடல் வீதி உலா நடைபெறுகிறது

    திருவண்ணாமலை:

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு தோறும்பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி உத்ராயணம் புண்ணிய காலம் ஒட்டி தை மாதம் இரண்டாம் நாள் மற்றும் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

    கோவிலில் உள்ள கோவிலின் கருவறை முதல் ஆயிரம் கால்மண்டபம் வரை உள்ள நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழவகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்புவழிபாடு நடைபெற்றது.

    இதையடுத்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனிவாகனங்களில் எழுந்தருளி நந்தி பகவானுக்கு காட்சி அளித்தனர்.

    பின்பு ராஜகோபுரம் அருகிலுள்ள திட்டிவாசல் வழியாக வெளியே வந்து சூரியபகவானுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள்அண்ணா மலையாருக்கு அரோகரா என பக்திமுழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரியபகவானையும் ஒருசேர சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மாடவீதியை மூன்று முறை வலம் வந்து இரவு திருஊடல் வீதியில் சாமி திருஊடல் விழா நடைபெறும் விழாவின் இறுதியாக அண்ணாமலையார் திருமஞ்சனம் கோபுரம் தெருவில் உள்ள குமர கோவில் இரவு தங்கி விடுவார். உண்ணாமலை அம்மன் அண்ணாமலையார் சன்னதியில் தங்கி விடுவார் மறுநாள் அதிகாலை அண்ணாமலையார் குமரக் கோவிலில் இருந்து கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் மறு ஊடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    • விபத்து ஏற்படுத்தி நிற்காமல் தப்பி சென்ற காரை பிடிக்க தீவிரம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.இவரது மகன் கோகுல் (வயது 25).இன்னும் திருமணம் ஆகவில்லை. போளூர் அடுத்த வெள்ளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (23).

    நேற்று 2 பேரும் தங்களது பைக்கில் வேலூர் -திருவண்ணாமலை சாலை, காந்திநகர் ஏரிக்கரை மீது வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் அடுத்தடுத்து 2 பைக்குகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோகுல், வெங்கடேசன் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கருவேல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55).மண்பாண்ட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்துள்ளது.

    இதற்காக பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் வயிற்று வலி சரியாக இல்லை. இதனால் விரட்டியில் இருந்த ராமலிங்கம் கடந்த பத்தாம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதனைக் கண்ட அவரது மகன் அண்ணாமலை தந்தை மீட்டு சிகிச்சையாக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுக்கு இதுகுறித்து அணுகாவூர் போலீஸ் சர்வீஸ் சென்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
    • விண்ணப்பத்தினை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    திருவண்ணாமலை:

    பெண் ஓட்டுனர்கள் மானிய விலையில் ஆட்டோ பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 வயதிற்கு மேல் 60 வயதிற்கு உட்பட்ட பெண் ஓட்டுனர்களாக இருக்க வேண்டும்.

    விருப்பம் உள்ள பெண்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கி முழுமையாக பூர்த்தி செய்து திருவண்ணாமலை காந்திநகர் 8-வது தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வல்லம் கேகேஎஸ் மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 13ம்தேதி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    தாளாளர் ஜனார்த்தனம், பள்ளி முதல்வர் கருணாமூர்த்தி உள்பட மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் ஆக்சலியம் கல்லூரி பயோ கெமிஸ்ட்ரி உதவி பேராசிரியர் டாக்டர் அபிபுல்லா கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு சிறப்பான கண்காட்சி அமைத்திருந்த மாணவ மாணவிகள் தேர்வு செய்தார்.

    முன்னதாக காலையில் நடந்த இறை வணக்கக் கூட்டத்தில், அபாகஸ் பிரிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டது.

    • 3 கால யாக பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கூழ்மாரியம்மன், கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடந்து முடிந்தது.

    இதை தொடர்ந்து 48 நாள் நெய் விளக்கு பூஜை செய்தனர்.

    நேற்று மண்டல பூஜை நிறைவு விழா, மற்றும் 108 சங்காபிஷேக விழா நடந்தது. இஞ்சிமேடு சிவன் கோயில் அர்ச்சகர் ஆனந்தன், குழுவினர்கா லையில் கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் மற்றும் 108 சங்குகளை வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து 3 காலயாக பூஜைகள் செய்தனர்.

    பின்னர் பம்பை உடுக்கை மேளதாளத்துடன் 108 சங்குகள் மற்றும் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து புனித நீரை கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதியில் மீது ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகர், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஆலோசனை
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற உள்ள திட்ட பணிகள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடம் கோவில்கள் ஆகிய இடங்களை தூய்மையாக வைப்பது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் உள்ள மயானம் அருகே கஞ்சா விற்பனை, வழிப்பறி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதனால் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு மயானம் அருகே சென்ற 2 பேரை தாக்கி மர்மகும்பல் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

    இது சம்பந்தமாக 10-ந் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல்

    பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் 3 நாட்களாகியும் கஞ்சா வியாபாரிகள் மற்றும் வழிப்பறி கும்பலை கைது செய்யாத போலீசாரை கண்டித்து, கோபால் தெருவில் 2-வது நாளாக பொதுமக்கள் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் பேச்சு வார்த்தை நடத்தி, கஞ்சா வியாபாரி மற்றும் வழிப்பறி கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விரைவாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து மார்கழி மாதம் கடைசி நாளான இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு அதிகாலை முதல் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்கநாதர் பெருமா ளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    இதையடுத்து ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு மங்கள மேளவாதியங்கள் முழங்க மகா தேவாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு கோலாட்டம் ஆடி சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், புது தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 30), இவர் செய்யார் டவுன், கண்ணியம் நகர் சந்திப்பில் காஞ்சிபுரம் சாலையில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு செய்ததாக செய்யாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போன்று வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமம், ரோட்டு தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (39), என்பவர் புதுப்பாளையம் கூட் ரோட்டில் பொது மக்களுக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவரை தூசி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×