என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்
    X

    2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்

    • வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் உள்ள மயானம் அருகே கஞ்சா விற்பனை, வழிப்பறி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதனால் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு மயானம் அருகே சென்ற 2 பேரை தாக்கி மர்மகும்பல் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

    இது சம்பந்தமாக 10-ந் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல்

    பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் 3 நாட்களாகியும் கஞ்சா வியாபாரிகள் மற்றும் வழிப்பறி கும்பலை கைது செய்யாத போலீசாரை கண்டித்து, கோபால் தெருவில் 2-வது நாளாக பொதுமக்கள் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் பேச்சு வார்த்தை நடத்தி, கஞ்சா வியாபாரி மற்றும் வழிப்பறி கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விரைவாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×