கூழ்மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

3 கால யாக பூஜைகள் நடந்தது ஏராளமான பக்தர்கள் தரிசனம்
புதுப்பட்டி, கூழ் மாரியம்மன், கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா 108 சங்காபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.
புதுப்பட்டி, கூழ் மாரியம்மன், கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா 108 சங்காபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கூழ்மாரியம்மன், கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடந்து முடிந்தது.

இதை தொடர்ந்து 48 நாள் நெய் விளக்கு பூஜை செய்தனர்.

நேற்று மண்டல பூஜை நிறைவு விழா, மற்றும் 108 சங்காபிஷேக விழா நடந்தது. இஞ்சிமேடு சிவன் கோயில் அர்ச்சகர் ஆனந்தன், குழுவினர்கா லையில் கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் மற்றும் 108 சங்குகளை வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து 3 காலயாக பூஜைகள் செய்தனர்.

பின்னர் பம்பை உடுக்கை மேளதாளத்துடன் 108 சங்குகள் மற்றும் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து புனித நீரை கூழ் மாரியம்மன், சிவன், முருகர், நவகிரக, சன்னதியில் மீது ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகர், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com