என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாமலையார் காட்சி"
- திருவண்ணாமலை கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
- திருஊடல் வீதி உலா நடைபெறுகிறது
திருவண்ணாமலை:
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு தோறும்பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி உத்ராயணம் புண்ணிய காலம் ஒட்டி தை மாதம் இரண்டாம் நாள் மற்றும் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
கோவிலில் உள்ள கோவிலின் கருவறை முதல் ஆயிரம் கால்மண்டபம் வரை உள்ள நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழவகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்புவழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனிவாகனங்களில் எழுந்தருளி நந்தி பகவானுக்கு காட்சி அளித்தனர்.
பின்பு ராஜகோபுரம் அருகிலுள்ள திட்டிவாசல் வழியாக வெளியே வந்து சூரியபகவானுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள்அண்ணா மலையாருக்கு அரோகரா என பக்திமுழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரியபகவானையும் ஒருசேர சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மாடவீதியை மூன்று முறை வலம் வந்து இரவு திருஊடல் வீதியில் சாமி திருஊடல் விழா நடைபெறும் விழாவின் இறுதியாக அண்ணாமலையார் திருமஞ்சனம் கோபுரம் தெருவில் உள்ள குமர கோவில் இரவு தங்கி விடுவார். உண்ணாமலை அம்மன் அண்ணாமலையார் சன்னதியில் தங்கி விடுவார் மறுநாள் அதிகாலை அண்ணாமலையார் குமரக் கோவிலில் இருந்து கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் மறு ஊடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.






