என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் நேற்று தை மகர உற்சவம் நடந்தது.

    இதைமுன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் செய்து மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இரவில் சாமி திருவீதி உலாவும், 10 மணி அளவில் நாடகமும் நடைபெற்றது.

    வாகனங்களில் வந்தவர்களால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்களை வரவேற்க கோவில் மலையடிவாரத்தில் பிரமாண்ட அனுமன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை படவேடு கோவில் செயல் அலுவலர் சிவஞானம், ஆரணி தக்கார் முத்துசாமி, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சாந்தி (வயது 58). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மோதியதில் சாந்தி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • பிப்ரவரி 28-ந் தேதி கடைசி நாள்

    திருவண்ணாமலை:

    வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித்தகுதிகள் தேர்ச்சிப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் கடந்த 31.12.2022-ம் தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப ப்படிவத்திலோ, அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்ய வேண்டும்.

    பின்னர் வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    • கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    வேட்டவலம்:

    வேட்டவலம் தேரடி வீதியை சேர்ந்த வர் சண்முகம். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மகன் அரிஹரன் (வயது 24), பொறியியல் பட்டதாரி.

    இவர் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதாகபெற்றோரிடம் கூறி விட்டு பைக்கில் சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    இரவு 8.30 மணியளவில் வேட்டவலம் ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத் தடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த அரிஹரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரிஹரன் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து அரிஹரனின் தந்தை சண்முகம் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போளூர் நற்குன்று கோவில் அருகே வழங்கப்படுகிறது
    • நூற்றுக்கணக்கானோர் பயனடைகின்றனர்

    போளூர்:

    போளூர் நற்குன்று கோவில் அருகே ஸ்ரீ கிருஷ்ணா டிரேடர்ஸ் நிறுவனம் மற்றும் சத்குரு கோபாலனந்தர் கோவில் அமைந்துள்ளது.

    முருகாபாடி கிராமம் அ.கோ.படவேடு பசியாற்றுவித்தல் மையம் சார்பில் கடந்த மார்கழி 1-ந் தேதி முதல் தினசரி காலை சித்திரத்தை வள்ளாரை, கரிசலாங்கண்ணி, தூதுவளை, கற்பூரவள்ளி முடக்கத்தான், துளசி, மிளகு, சீரக, ஓமம் கருஞ்சீரகம் போன்றவை மூலம் செய்த மூலிகை கஞ்சி செய்யப்படுகிறது.

    இந்த மூலிகை கஞ்சி தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டு வருகிறது பசியாற்றுவித்தல் நிர்வாகி பாலகிருஷ்ணா இதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • மின் அதிகாரி தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகிலுள்ள நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாய்க் கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவ லம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய் யூர், சாவல்பூண்டி, அத்தியந் தல், கச்சிராப்பட்டு, புத்தியந் தல், காந்திபுரம், தென்மாத் தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை,காம் பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    இந்த தகவலை திருவண் ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் பக்தவச்சலன் தெரிவித்துள்ளார்.

    வேட்டவலம்

    இதேபோல் வேட்டவலம் துணை மின்நி லையத்தில் பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன் னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூட லூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந் தாங்கல், அடுக்கம் மற்றும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சா ரம் நிறுத்தப்படும்

    மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் (கிழக்கு) மு.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

    போளூர்

    போளூர் அடுத்த ஆதமங்கலம்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர் கெங்கவரம், கிடாம் பாளை யம், மேல்சோழங்குப்பம் வீரளூர், சோழவரம், கேட் டவரம்பாளையம் பள்ளகொல்லை ஆகிய பகுதிகளில் மின் சாரம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் குமரன் தெரி வித்துள்ளார்.

    • 1000 பேருக்கு அன்னதானம்
    • பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறு நகர அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா நேற்று ஆரணி கூட்ரோடு, கொடநகர் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி, ரவிச்சந்திரன், மெய்யப்பன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ் நகர நிர்வாகிகள் தணிகாசலம், இளையராஜா, சுரேஷ், எழில், பிரகாஷ், வெங்கடேசன், கோபி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று செய்யாறு ஒன்றிய அண்ணா திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கி எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலை பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.

    • தள்ளாத வயதிலும் மூதாட்டி எல்லம்மாள் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.
    • வேகமாக வந்த மாடு ஒன்று கோலம் போட்டுக்கொண்டு இருந்த எல்லம்மாளை முட்டி தள்ளியது.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வட மாவந்தல், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 100).

    தள்ளாத வயதிலும் மூதாட்டி எல்லம்மாள் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் எல்லம்மாள் வீட்டு முன்பு தெருவில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்பகுதியில் பொதுமக்கள் தங்களது மாடுகளை அலங்காரம் செய்து தெருவில் மாடுகளை விரட்டி வந்தனர்.

    அப்போது வேகமாக வந்த மாடு ஒன்று கோலம் போட்டுக்கொண்டு இருந்த எல்லம்மாளை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மூதாட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு முட்டி 100 வயது மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உறவினர்கள் சாலை மறியல்
    • அரசு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே இளை யாங்கன்னி கிராமத்தில் உள்ள குழந்தை ஏசு நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 55), கூலி தொழிலாளி. இவர் தானிப்பாடி அருகில் உள்ள மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சும் கும்பலு டன் சேர்ந்து சாராயம் காய்ச் சும் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம். போல சாராயம் காய்ச்சும் வேலைக்கு சென்றவர் மாலை வீடுதிரும்பும்போது சாராயம் குடித்துவிட்டு வந்துள்ளார். வரும் வழியிலேயே தட்ட ரனை என்ற இடத்தில் சுருண்டு விழுந்து அதே இடத் தில் பரிதாபமாக இறந்தார்.

    இதையறிந்த அந்தோணிசா மியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து கதறி அழுதனர். பின்னர் ஆத் திரம் அடைந்த அவர்கள் பிணத்தை எடுக்காமல் அதே இடத்தில் வைத்து போலீசாரை கண்டித்து இளையாங்கன்னி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பலமுறை தட்டரணை பகு தியில் நடைபெறும் சாராய விற்பனை மற்றும் சாராயம் காய்ச்சும் தொழிலை கட்டுப் படுத்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த சோக சம்பவம் நடைபெற்றதாகவும் சாலை மறியல் எனவே அந்தோணிசாமியின் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இந்த சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தண்டராம் பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தோணிசாமி இறந்ததற்கான உண்மை நிலை கண்டறியபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் பொது மக்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து இரவு 8 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம்அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவிழாவை வேடிக்கை பார்த்துக் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கலசப்பாக்கம்:

    கலசப்பாக்கம் பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்று வருகின்றன. விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் காளை விடும் விழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கலசப்பாக்கம் அடுத்த குப்பம் கிராமம் பூங்காவனத்தம்மன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    கீழ பாலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் காளை விடும் திருவிழா நடந்தது. காளை விடும் விழாவை பார்ப்பதற்காக கார்த்தி கீழ்பாலூர் பகுதிக்கு சென்று வருவதாக மனைவி குமாரிடம் கூறிவிட்டு சென்றார்.

    அப்போது கார்த்தி ஒரு ஓரமாக நின்று கொண்டு காளை விடும் விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தன.

    அப்போது திடீரென காளை ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி மீது எதிர்பாராத விதமாக அவரை முட்டி தள்ளியது. இதில் கார்த்தி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கார்த்தி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உரிய அனுமதி பெற்று கொடிக்கம்பம் நடுமாறு அறிவுரை
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடை தாங்கி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றியுள்ளனர்.

    இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொகுதி துணை செயலாளர் சுகுமார் தலைமையில் காவல் நிலையம் எதிரே திடீரென தர்ணா செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் பாபா ஆகியோர் நாம் தமிழர் கட்சியினரிடம் உரிய அனுமதி பெற்று கொடிக்கம்பம் நடுமாறு அறிவுறுத்தினர்.

    அதன் பேரில் நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது. பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார்.

    ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கினார்.

    இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    இந்த ஊடல் மற் றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

    மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், பழங்கள் மற்றும் பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார்.

    அங்கிருந்து இன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் புறப்பாடு நடந்தது. கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நிகழ்ச்சி நடக்கும். அப்போது சாமி அம்மன் இணைந்து கோவிலுக்குள் செல்வார்கள். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விடுமுறை தினம் என்பதால் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×