என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை நெருங்கிவிட்டோம்.

    விமானத்தில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளை கும்பல் மேலும் 10 பேரிடம் விசாரணை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில், அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    மேலும், கொள்ளையர்கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.ஜி.கண்ணன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லாட்ஜில் தங்க அறை கொடுத்த மேலாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.களை கொள்ளை கும்பல் நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். இங்கு கொள்ளையடித்து விட்டு பெங்களூர் சென்று விமானம் மூலம் அரியானா சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த 2 பேர், அரியானாவை சேர்ந்த 2 பேர், குஜராத்தை சேர்ந்த 6 பேர் என 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    கொள்ளையில் ஈடுபட்டது அரியானா கும்பல் தான். மற்ற மாநிலத்தவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
    • கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

    வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.பில் அறை எடுத்து தங்கியிருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கே.ஜி.எப்.பிற்கு விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு அறை எடுத்து கொடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில் அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் ஆரிப் என தெரியவந்துள்ளது.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அங்கு தங்கியிருந்த கும்பல் போலீசார் நெருங்கியதை அறிந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏ.டி.எம். கொள்ளையில் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் உதவியவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என்றனர்.

    • 200 காளைகள் பங்கேற்று ஓடியது
    • முதலிடம் பெற்ற காளைக்கு ரூ 55 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தில் ஆண்டு தோறும் காதலர் தினத்தில் காளைவிடும் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் காளைவிடும் திருவிழா கிராம சார்பில் நடத்தப்பட்டது.

    இந்த விழாவை வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மன் உள்பட வருவாய் துறையினர் மேற்பார்வையிட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் செய்திருந்தனர்.

    இதில் சுமார் 200 மாடுகள் பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்டு ஓட விடப்பட்டது. அப்போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு அங்குள்ள சிகிச்சை மையத்தில முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    முதலிடம் பெற்ற ஜோலார்பேட்டை அன்வர்பாய் காளைக்கு ரூ 55 ஆயிரம், இரண்டாமிடம் திருப்பத்தூர் நந்தினி எக்ஸ்பிரஸ் காளைக்கு ரூ 50 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற லத்தேரி பாபு காளைக்கு ரூ.45 ஆயிரம் உள்பட பல்வேறு காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக விநாயகர், மஞசியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது.இரவில் நாடகம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பெரியதனம், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணை தலைவர் அமுதாபழனி, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள் மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஏராளமான பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்
    • புதுப்பாளையம் பேரூராட்சியில் வைக்கப்பட்டிருந்தது

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பேரூராட்சியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சி வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காணொளி மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்வை புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்வில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள், கண்காட்சி வாகன மூலம் திரையிடப்பட்டது. செய்தி மற்றும் ஊடகத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியும் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது.

    தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி அப்பகுதி பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.

    • கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கி ஏ.டி.எம்., ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ''கொள்ளை கும்பல் ஏ.டி.எம் மையங்களை முன்கூட்டியே நோட்டமிட்ட பிறகே திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

    ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ கோல்ட் வாகனத்தில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு மையத்திலும் ஷட்டரை இறக்கிவிட்டு காஸ் வெல்டிங் மூலம் 20 நிமிடங்களில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

    வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரை இணைக்கும் 9 முக்கிய சாலை பகுதிகளிலும், மாவட்டத்தின் புறவழிச்சாலை பகுதிகளிலும், சுங்கச்சாவடிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் கொள்ளை கும்பலை நெருங்கி விட்டதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர்.

    ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

    வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்று கர்நாடக மாநிலத்தில் நிரந்தரமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தனர்.

    திருவண்ணாமலை நகரப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாக இருக்கும் ஏடிஎம்களை நோட்டமிட்டனர். பின்னர் கொள்ளையடிக்க கூடிய ஏடிஎம் மையங்களை அவர்கள் தேர்வு செய்தனர்.

    கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னதாக பணத்தை கொள்ளையடித்து விட்டு எந்த வழியாக செல்வது என ஆய்வு செய்தனர். சுங்கச்சாவடி இல்லாத பாதை எது, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத சாலைகள் எது என்பதை நன்கு கண்டறிந்து துல்லியமாக திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி உள்ளனர்.

    ஓரிரு நாட்களில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • கோவை உக்கடம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • திருவண்ணாமலை பகுதியில் நடந்த சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

    திருவண்ணாமலை:

    கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    கோவை உக்கடம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் பலமுறை சோதனை செய்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 60 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை திருவண்ணாமலை உள்பட தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை பகுதியில் நடந்த சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

    அவர்களை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முனுசாமி மற்றும் துரை ஆகியோர் கடந்த வாரம் மாலை நேரத்தில் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராம கூட்டுச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே பைக்கில் வந்த நபர் ஒருவர் மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த 2 மாணவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முனுசாமி என்ற மாணவன் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.

    பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தும் இதுவரை கீழ்க்கொ டுங்காலூர் போலீசார் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
    • தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள சாரோன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவரது வீட்டு மாடியில் நேற்று சங்கர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தாயார் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தீ பிடித்து எரிந்தது.

    சத்தம் கேட்டு சங்கர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். காரின் இருக்கைகள், கதவு பகுதிகள் எரிந்து கருகியது.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் சங்கர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது.
    • கொள்ளையர்களின் கண்கள் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அந்த அளவுக்கு தங்களது உடல் மற்றும் முகத்தை மறைத்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த அரியானா கும்பல் ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக சித்தூர் சென்றது தெரியவந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் தேசியமயமாக்கப்பட்ட 3 வங்கி ஏ.டி.எம்., ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திருவண்ணாமலையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் அடங்கிய குழுவினர் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கொள்ளை கும்பல் ஏ.டி.எம். மையங்களை முன்கூட்டியே நோட்டமிட்ட பிறகே திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ கோல்ட் கலர் வாகனத்தில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் கொள்ளையர்களின் கண்கள் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அந்த அளவுக்கு தங்களது உடல் மற்றும் முகத்தை மறைத்துள்ளனர்.

    தேனிமலை ஏ.டி.எம். மையத்தில் கும்பல் கொள்ளையடித்த போது ஷட்டரை மூடிக்கொண்டு உள்ளே கைவரிசை காட்டியுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக சென்ற பொது மக்கள் ஏ.டி.எம். மையத்தில் வங்கி அதிகாரிகள் பணம் நிரப்புகிறார்கள் என நினைத்து அதனை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளனர். இது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அதிகாலை 1.19 மணிக்கு முதல் கொள்ளையை தொடங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அவளூர்பேட்டை ரோடு, கலசப்பாக்கம், போளூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்துள்ளனர்.

    ஒவ்வொரு மையத்திலும் ஷட்டரை இறக்கிவிட்டு காஸ் வெல்டிங் மூலம் 20 நிமிடங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    கடைசியாக நேற்று முன்தினம் அதிகாலை 4.20 மணிக்கு போளூரில் கொள்ளையை முடித்துவிட்டு புறப்பட்டுள்ளனர். 3 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்தவர்கள் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

    வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளது.

    சுமார் 400 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ள தனிப்படையினர் சுங்கச்சாவடி இல்லாத சாலைகளில் கொள்ளையர்களின் டாடா சுமோ கார் கடந்து சென்றுள்ளதா? என விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் ஆந்திர பதிவெண் மட்டும் இதுவரை உறுதியாகவில்லை.

    தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு திருவண்ணாமலை, போளுர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பலராமன் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் வரதராஜ், சுதாகர் உள்பட 6 பேரை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    ரோந்து பணியில் ஈடுபட்ட 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது வேலூர் மெயின் ரோடு அருகே வரும்போது கீழ் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர் முருகன் ஆகியோர் சென்று கொண்டிருந்த பைக் மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் யுவராஜ், முருகன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் இது சம்பந்தமாக யுவராஜ் கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப சொத்தை பிரித்து தராததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகர் என்பவருக்கும் வள்ளி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும் சந்திரசேகர் வள்ளி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்களாக குடும்ப சொத்தை பிரித்து தரக்கோரி தனது தாயாருடன் சந்திரசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மனமுடைந்த சந்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சந்திரசேகரனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து சந்திரசேகரின் மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் களம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர், அருகே உள்ள மோசவாடி, கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 24). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் ராஜா மற்றும் அதே பகுதியை சேர்ந்த அந்தோணிராஜா, ஆகிய இருவரும் நேற்று மாலை பைக்கில் மோசவாடி கிராமத்தில் இருந்து கோழிப்புலியூர், சென்று மீண்டும் பைக்கில் மோசவாடி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பகவந்தபுரம், கூட்டுரோடு அருகே சென்ற போது நிலை பைக் தடுமாறிய சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்தோணி ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராஜாவை, மீட்டு செய்யாறு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜா, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜாவின், தந்தை ராஜாமணி, புகார் அளித்தார். புகாரின் பேரில் பெரணமல்லூர், போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×