search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people were injured"

    • 200 காளைகள் பங்கேற்று ஓடியது
    • முதலிடம் பெற்ற காளைக்கு ரூ 55 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தில் ஆண்டு தோறும் காதலர் தினத்தில் காளைவிடும் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் காளைவிடும் திருவிழா கிராம சார்பில் நடத்தப்பட்டது.

    இந்த விழாவை வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மன் உள்பட வருவாய் துறையினர் மேற்பார்வையிட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் செய்திருந்தனர்.

    இதில் சுமார் 200 மாடுகள் பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்டு ஓட விடப்பட்டது. அப்போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு அங்குள்ள சிகிச்சை மையத்தில முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    முதலிடம் பெற்ற ஜோலார்பேட்டை அன்வர்பாய் காளைக்கு ரூ 55 ஆயிரம், இரண்டாமிடம் திருப்பத்தூர் நந்தினி எக்ஸ்பிரஸ் காளைக்கு ரூ 50 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற லத்தேரி பாபு காளைக்கு ரூ.45 ஆயிரம் உள்பட பல்வேறு காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக விநாயகர், மஞசியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது.இரவில் நாடகம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பெரியதனம், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணை தலைவர் அமுதாபழனி, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள் மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.
    • மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.

    வாகனத்தை அன்வர் பாஷா ஒட்டினார். மினிவேன் ஊட்டி சாலை 2-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பிரேக் பிடிக்காமல், சாலையில் இருந்த இடது பக்க சுவற்றில் மோதி மினிவேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஜெகதீஷ் படிகர்(30), மல்லன்ன கவுடா(29), பிரகாஷ்(29), சிவப்பா(41), நாகன்கவுடா(29) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகி ருஷ்ணன், சப்-இன்ஸ்பெ க்டர் முருகநாதன் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைச்சாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ்படிகர்(30) மற்றும் மல்லன்ன கவுடா(29) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×