search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 5 பேர் காயம்
    X

    மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 5 பேர் காயம்

    • 200 காளைகள் பங்கேற்று ஓடியது
    • முதலிடம் பெற்ற காளைக்கு ரூ 55 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தில் ஆண்டு தோறும் காதலர் தினத்தில் காளைவிடும் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் காளைவிடும் திருவிழா கிராம சார்பில் நடத்தப்பட்டது.

    இந்த விழாவை வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மன் உள்பட வருவாய் துறையினர் மேற்பார்வையிட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் செய்திருந்தனர்.

    இதில் சுமார் 200 மாடுகள் பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்டு ஓட விடப்பட்டது. அப்போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு அங்குள்ள சிகிச்சை மையத்தில முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    முதலிடம் பெற்ற ஜோலார்பேட்டை அன்வர்பாய் காளைக்கு ரூ 55 ஆயிரம், இரண்டாமிடம் திருப்பத்தூர் நந்தினி எக்ஸ்பிரஸ் காளைக்கு ரூ 50 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற லத்தேரி பாபு காளைக்கு ரூ.45 ஆயிரம் உள்பட பல்வேறு காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக விநாயகர், மஞசியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது.இரவில் நாடகம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பெரியதனம், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணை தலைவர் அமுதாபழனி, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள் மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×