என் மலர்
நீங்கள் தேடியது "அரசு நலத்திட்ட கண்காட்சி"
- ஏராளமான பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்
- புதுப்பாளையம் பேரூராட்சியில் வைக்கப்பட்டிருந்தது
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பேரூராட்சியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சி வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காணொளி மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வை புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள், கண்காட்சி வாகன மூலம் திரையிடப்பட்டது. செய்தி மற்றும் ஊடகத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியும் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி அப்பகுதி பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.






