என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்
    • வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கட்ட பொம்மன் தெருவில் உள்ள ஒரு கடைக்கு நேற்று மாலை மொபட்டில் ஒருவர் வந்தார். அப்போது மொபட்டின் கால் வைக்கும் பகுதியில் சிறிய பாம்பு ஒன்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வெளியேற்ற முயற்சி செய்தார்.

    அந்தப் பகுதி எப்பொழுதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் மொபட்டில் பாம்பு ஏறிய சம்பவம் அறிந்தபொதுமக்கள் பலர் அங்கு திரண்டனர். பின் னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் தீயணைப் புத்துறையினர் விரைந்து வந்து மொபட்டில் இருந்து பாம்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வாகனத்தில் இருந்த பாம்பு அதிலிருந்து கீழே இறங்கியது. பின்னர் அதனை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரோந்து பணியின் போது போலீசார் மீட்டனர்
    • பெற்றோரிடம் ஒப்படைப்பு

    ஆரணி:

    கலசபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 25-ந் தேதி கடத்தப்பட்டார். இந்த நிலையில் 26-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் அப்பந்தாங்கல் கூட் ரோடு அருகே உள்ள சோதனைச்சாவடியில் ஆரணி டவுன் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந் திரன், ஆரணி தாலுகா போலீஸ்காரர் பாபு ஆகியோர்ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு நடந்து சென்ற பள்ளி மாணவியையும், மற்றவரையும் அழைக்கும் போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாணவியை போலீசார் மீட்டு விசாரித்தனர்.

    அப்போது மாணவி, தன்னை கத்திமுனையில் காரில் கடத்தி வரப்பட்டதாகவும் இரவு முழுவதும் ஒரு இடத்தில் இருந்ததாகவும் அதிகாலையில் வேறு பஸ் ஏறி செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறினார். இதையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்டு ஒப்படைத்த ரவிச்சந்திரன், பாபு ஆகியோரை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    • பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
    • பிரம்மோற்சவ விழா நடந்தது

    செய்யாறு:

    செய்யாறு டவுன், காமராஜர் நகர், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    நேற்று 10-ம் நாள் திருவிழா முன்னிட்டு 2000 பெண் பக்தர்கள் ஞான முருகன் பூண்டி, முருகன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் ஊர்வலத்தின் போது அலகு குத்தியும், வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இரவு 7 மணி அளவில் சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குவதற்காக, காப்பு கட்டி, விரதம் இருந்து, ஞான முருகன் பூண்டி, முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து தீச்சட்டி ஏந்தியும், அங்காளம்மன் வேடம் தரித்தும், கிரகம் சுமந்த படியும், ஓம் சக்தி, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.

    இவ்விழாவைக் காண செய்யாறு நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாக விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். செய்யார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையின் கீழ் விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • 63 வகையான உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது.

    அதனை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்முயற்சிகள் மூலம் குடிமக்களிடையே ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உணவின் ஒரு பகுதியாக சிறுதானிய உணவுகளை இணைப்பதை ஊக்குவித்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை, வேளாண்மை துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட, நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பள்ளி மாணவிகள் ஆகியோர் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய இனிப்புகள் மற்றும் சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் சார்பாக 15 வகையான சிறுதானிய வகை உணவு பொருட்களையும் மற்றும் 35 வகையான சிறுதானியங்களை காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலை அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 63 வகையான சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சிறுதானிய விதைகளை பார்வையிட்டார். மேலும் பள்ளிகளில் காலை வழிப்பாட்டு கூட்டத்தின் போது சிறுதானியத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு இடைவேளையின் போது சிறுதானிய சிற்றுண்டிகள் உட்கொள்ளவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகிய இருவரையும் கடந்த 22-ந் தேதி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி 4 ஏடிஎம்களை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.73 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது.

    இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர்.

    இதில், கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 35), ஆஜாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில் (கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்னை கும்பல் தங்கியிருந்து கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.

    கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகிய இருவரையும் கடந்த 22-ந் தேதி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அதன்படி கோர்ட் அனுமதித்த 7 நாட்கள் இன்றுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, இன்று திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவரையும் ஆஜர்படுத்த உள்ளனர். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை அரியானாவில் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டுள்ளனர். அது சாத்தியமில்லை என தெரிந்த பிறகே ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலில் வங்கியில் மிகப்பெரிய கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.அதை கொண்டு செல்வதற்காக காரை திருடினோம்.

    குறிப்பிட்ட இடத்திலிருந்து கண்டெய்னர் லாரியில் பணத்தை அரியானா கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தோம்.வங்கியில் அவ்வளவு பெரிய தொகை கொள்ளையடிக்க முடியாது என்பதால் திட்டத்தை மாற்றிக் கொண்டு ஏடிஎம்களில் கொள்ளையடித்தோம்.

    தடயங்களை அழிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரங்களை தீயிட்டும் தொடர்ந்து திட்டமிட்டபடி சோதனை சாவடிகள் இல்லாத வழியாக தப்பிச் சென்றோம். கோலாரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் பணத்தை அரியானாவுக்கு கொண்டு சென்றோம் என தெரிவித்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் ரூ.70 லட்சம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனிப்படையினர் அரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு பணம் பதுக்கி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலம் கோலாரில் கைதான இருவரையும் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • மாடுகள் முட்டி 50 பேர் காயம்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு 37ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த காளை விடும் திருவிழாவில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்க ளிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா கேரளா மாநிலங்களிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் விழியாக துள்ளி குதித்து ஓடியது.

    இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 2-ம் பரிசாக 65 ஆயிரம் ரூபாய், 3-வது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும் உள்ளிட்ட 68 பரிசுகள் வழங்கப்பட்டது.

    காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க ஆரணி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரிநோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரிநோய் தடுப்பூசிப் பணி ஆண்டிற்கு 2 முறை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தற்போது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி 3-வது சுற்று வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

    அனைத்து கிராமங்க ளிலும் இத்தடுப்பூசி போடப்படும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரிநோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடித்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி கோமாரி நோயை அறவே வராமல் தடுக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகள் மூலமாக ஏற்படும் பொருளாதார இழப்பை தடுத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • யார்? என அடையாளம் தெரியவில்லை

    ஆரணி:

    காட்பாடி- திருவண்ணாமலை மார்க்கமாக உள்ள ரெயில் பாதையில் ஆரணியை அடுத்த குன்னத்தூர் ரெயில்வேகேட் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து அடிபட்டு கிடந்தார்.

    உடன டியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் உதவியுடன் திருவண்ணா மலை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

    • சொத்து தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 47), இவரது தம்பி திருமலை (44). இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்கள் கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பொதுவான வீட்டை இரண்டாக பிரித்து இருவரும் தனித்தனி வாசல் ஏற்படுத்தி வசித்து வந்தனர்.

    ஏழுமலைக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து பெரிய ஏரி கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. திருமலைக்கு திருமணம் ஆகாததால் அவர் தனியாக வசித்து வந்தார்.

    ஏழுமலையிடம் பொது வீட்டை விற்க வேண்டும். எனவே, வீட்டின் பத்திரத்தை கொடு என திருமலை கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலையை திருமலை எழுப்பினார் அப்போது வீட்டை விற்பதற்கு பத்திரத்தை தருகிறாயா?, இல்லையா? என்று கேட்கவே அவர்களுக்குள் மோதல் முற்றியது.

    அதனால் ஆத்திர மடைந்த ஏழுமலை வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து திருமலையை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு திருமலை ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இறந்த அவரை வீட்டு தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டிக்கு இழுத்துச் சென்றார். அங்கு தொட்டிக்குள் திருமலையை தள்ளிவிட்டு மண்ணை கொட்டி மூடினர்.

    பின்னர் ஏழுமலை தலைமறைவாகி விட்டார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் நடந்த சண்டை குறித்து விசாரிப்பதற்காக அவர்களது வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் பார்த்தனர். அப்போது தோட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் மண்ணுக்குள் திருமலை புதைக்கப்பட்டு கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருமலையின் உடலை மீட்டு வெளியே எடுத்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான ஏழுமலையை தேடி கண்டுபிடித்தபோது நடந்த சம்பவத்தை கூறி ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யூ-டியூப் சேனலுக்காக படம் எடுக்க வந்த ேபாது பரிதாபம்
    • அறிவிப்பு பலகை வைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு வழியாககமண்டல நதி ஓடுகிறது. நேற்று முன்தி னம் சென்னை கீழ்கட்டளை உள்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் 8 பேர் குழுவாக படவேடு பகுதியில் உள்ள ராமர் கோவிலை யூடி யூப் சேனலுக்காக வீடியோ எடுக்க வந்து தங்கியிருந்தனர்.

    பின்னர் நேற்று மதியம் பிரகலாதன் என்பவர், தான் சாப்பிட்ட தட்டை கழுவுவ தற்காக கமண்டல நதிக்கு சென்றார். அவருடன் நங்க நல்லூரை சேர்ந்த ஸ்ரீவர்ஷ னும் சென்றார். அப்போது பிரகலாதன் கால் தவறி தண் ணீரில் விழுந்து விட்டார். இதனை பார்த்த ஸ்ரீவர்ஷன் அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து போளூர் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் தீய ணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடியபோது 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். பின்னர் இருவரது உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    கண்ணமங்கலம் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரி சோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நடந்த இடத்தில் பாறைகள் உள்ளன. இதனால் இங்கு வழுக்கி விழுந்து ஏற்கனவே பலர் இறந்துள்ள னர். எனவே அந்த இடத்தில் எச்சரிக்கை செய்யும் வகை யில் அறிவிப்பு பலகை மற்றும் கம்பிவேலி அமைத்து யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண் டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

    • மணல் மேலே சரிந்து விழுந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த மோசவாடியைச் சேர்ந்தவர் வடிவேல் (43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (37). இவர்களுக்கு சாருலதா (18). சர்மி (வயது 9) என 2 மகள்கள் உள்ளனர்.

    சர்மி, கரிப்பூர் யூனியன் நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி யில், மற்றொருவரின் வீடு கட்டுமானப் பணி நடந்துவருகிறது. அந்த வீட்டுக்கான செப்டிக்டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சிறுமி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர் பாராதவிதமாக மண் சரிந்ததில், செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத் தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அதற் குள்ளாக சர்மி மீது மண் சரிந்து உயிருக்கு போராடிக் கொண் டிருந்தார். அவரை மீட்பதற்காக பொதுமக்கள் முயன்றனர். ஆனால் சிறுமி மண்ணுக்குள் முழுமையாக புதைந்துவிட்டார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப் புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து, சரிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தி சர்மி இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த முள்ளிப் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் சேது ரத்தினம் (வயது 77). இவர் கடந்த 20-ந் தேதி சைக் கிளில் ஆரணி பஜாருக்கு வந்து கொண்டிருந்தார்.

    காந்தி ரோட்டில் உள்ள தியேட்டர் அருகாமையில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த நபர் சேதுரத்தினம் ஓட்டி சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதினார்.

    பின்னர் அங்கிருந்து அந்த நபர் வேகமாக பைக்கில் சென்று விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சேதுரத்தினத்தை அந்த வழியாக சென்றார்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மகன் அருணாசலம், ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த சேதுரத்தினத்திற்கு காந்திமதி என்ற மனைவியும், 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.

    ×