என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கழிவறை தொட்டி கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுமி சாவு
    X

    கழிவறை தொட்டி கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுமி சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணல் மேலே சரிந்து விழுந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த மோசவாடியைச் சேர்ந்தவர் வடிவேல் (43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (37). இவர்களுக்கு சாருலதா (18). சர்மி (வயது 9) என 2 மகள்கள் உள்ளனர்.

    சர்மி, கரிப்பூர் யூனியன் நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி யில், மற்றொருவரின் வீடு கட்டுமானப் பணி நடந்துவருகிறது. அந்த வீட்டுக்கான செப்டிக்டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சிறுமி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர் பாராதவிதமாக மண் சரிந்ததில், செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத் தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அதற் குள்ளாக சர்மி மீது மண் சரிந்து உயிருக்கு போராடிக் கொண் டிருந்தார். அவரை மீட்பதற்காக பொதுமக்கள் முயன்றனர். ஆனால் சிறுமி மண்ணுக்குள் முழுமையாக புதைந்துவிட்டார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப் புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து, சரிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தி சர்மி இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×