என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • 1,000 போலீசார் பாதுகாப்பு

    ஆரணி:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக அணிவகுப்பு பேரணி நடத்திட தமிழகம் முழுவதும் நீதிமன்றம் மூலம் தடை செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு மூலம் அனுமதி பெறப்பட்டு (இன்று) தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணி வகுப்பு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதா னத்தில் இருந்து சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 300 பேர் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழி யாக கொசப்பாளையம் சுந்தரம் தெரு, நேஷனல் டாக்கீஸ் சாலை, தச்சூர் சாலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள என்.மகாலில் நிறைவு செய்து அங்கு ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.

    இந்த நிலையில் பேரணி செல்லும் பாதைகளை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் நேற்று போலீசாருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது காந்தி ரோட்டில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் தடுப்பு வேலிகள் எங்கு அமைக்கப்பட வேண்டும், கயிறுகள் எங்கு போலீசார் அமைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆரணி துணை போலீஸ் சூப் பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரேசன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார். சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி புதிய பஸ் நிலைய அணுகுசாலை சந்திப்பு பகுதியில் ஜெ.பேரவை மாவட்டச் செயலாளர் கே.பாஸ்கர் தலைமையில், மருதாடு கிராமத்தில் வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் தலைமையிலும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டது.

    முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவர் டி.கே.பி.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தூசி மோகன் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து பொது மக்களுக்கு மோர், கூழ், இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    விழாவில் நகரச் செயலாளர் எம்.பாஷா, நகர பேரவை செயலாளர் ராஜசேகர், ஒன்றியக்குழு உறுப்பினர் நா.சிவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் தீபா செந்தில்குமார், அம்பிகா மேகநாதன், ஒன்றிய துணைச் செயலர் பந்தல் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • வந்தவாசி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற ரூ.82 லட்சம் மதிப்பில் 33 மின்கலன் வாகனங்கள் நேற்று வழங்கப்பட்டன.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருதாடு, வழூர் அகரம், வெளியம்பாக்கம், அத்திப்பாக்கம் உள்ளிட்ட 26 ஊராட்சிகளுக்கு மொத்தம் 33 மின்கலன் வாகனங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. மின்கலன் வாகன சாவியை ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பணியிடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு
    • சேத்துப்பட்டு தாசில்தார் அலுவலகம் முன்பு பரபரப்பு

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு தாசில் தாராக கடந்த 53 நாட்க ளுக்கு முன்பு பாலமுருகன் பதவி ஏற்றார். இவர் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு இல்லாமல் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    பொது மக்கள் கொடுக்கும் மனுக் கள் மீது முறையாக நடவ டிக்கை மேற்கொள்ளாமல் அலுவலர்களின் ஒத்து ழைப்பு இல்லாமல் தானா கவே சான்றுகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த அதி காரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் புகார் மனு கொடுத்த இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை தாசில்தார் பாலமுருகன் செய்யாறு சிப்காட் தாசில்தாராக திடீர் மாற்றம் செய்யப்பட்டார்.

    இவருக்கு பதிலாக செய்யாறு சிப்காட் தாசில்தாராக பணிபுரிந்து வந்த சசிகலா சேத்துப்பட்டு தாசில்தாராக மாற்றப் பட்டார். பொறுப்பு ஏற்பதற்காக நேற்று மாலை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு சசிகலா வந்தார்.

    இதனால் கடுப்பான தாசில்தார் பாலமுருகன் நேற்று மாலை சேத்துப்பட்டு தாலுகா அலுவலக வளா கத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவலறிந்த சேத்துப் பட்டு போலீசார் தாலுகா அலுவலகம் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்ட னர். புதிய தாசில்தாராக பதவி ஏற்க வந்த சசிகலா தாலுகா அலுவலகத்தில் வரமுடியாமல் வெளியில் பல மணி நேரம் காத்து நின்றார். பின்னர் தாசில்தார் பால முருகன் நிலைப்பாடு குறி த்து அலுவலக ஊழியர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் தாசில்தார் பாலமுருகன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்து குடும்பத் தார் வந்து சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இச் சம்பவத்தால் நேற்று மாலை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

    • வந்தவாசிக்கு 45 வருடங்களுக்கு முன்பு வந்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அனாதையாக ஆதரவு தேடி வந்த நபருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த நபர்களே சபரி முத்து என பெயர் வைத்து வீடு வீடாக தினமும் 3 வேலையும் அவருக்கு உணவு வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவால் இருந்த சபரி முத்துவை செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் அனுமதித்து ஊர் மக்கள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் சபரிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார் .முதியவரின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்து கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்.

    அனாதையாக வந்த நபருக்கு மாம்பட்டு கிராமமே ஒன்றிணைந்து ஊர்வ லமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

    அனாதையாக வந்த சபரிமுத்துக்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு பெண்கள் கண்ணீர் சிந்தியும் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 100 பேர் கைது
    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது

    ஆரணி:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆரணி அருகே களம்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ெரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் காங்கிரஸ் கட்சியினரை அப்புறபடுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் நகர தலைவர் பொன்னையன் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் நகர இளைஞரணி தலைவர் பிரபு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நகர செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அம்மன் திருவீதி உலா நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் நாராய ணமங்கலம் கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று தமிழ் புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்தனர். கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே அழகுசேனை சூளைமேடு பகுதியில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் 23ம்ஆண்டாக லட்சதீபம், ஆஞ்சநேயர் வீதி உலா நடைபெற்றது. இரவில் நாடகம் நடைபெற்றது.

    மேலும் 5புத்தூரில் அடங்கிய சின்னப் புத்தூரில் மாரியம்மன் கோவலில் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது.

    மாலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இரவில் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்காரம் செய்து அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    • சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர்
    • 2 பேரை தேடி வருகின்றனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பெருமுட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு ஊழியர்கள் டாஸ்மாக் கடையை வழக்கம் போல பூட்டி விட்டு சென்றனர்.

    இதை நோட்டமிட்டு மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த 3 பேர் கடப்பாறை உள்பட பொருட்களைக் கொண்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது திடீரென கடையின் உள்ளே இருந்து 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதில் 17 வயது சிறுவனை போலீசார் மடக்கி பிடித்து அவனிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பேரை செங்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தணிக்கை அதிகாரி வழங்கினார்
    • நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அறிவுறுத்தலின்படி போலீஸ் நிலையத்தை பொதுமக்களுக்கு மிகவும் பயன்பெறும் வகையில் வழக்குகளை விரைவாக கையாளுதல் உட்பட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் சிறப்பாக பராமரித்து போலீஸ் நிலையத்தின் தரத்தை உயர்த்தும், ஐ.எஸ்.ஓ. தரச்சான்று எனப்படும் பணியிட மதிப்பீடானது திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கிராமியம், தானிப்பாடி, போளூர் மற்றும் ஆரணி நகரம் ஆகிய 4 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றானது வழங்கப்பட்டள்ளது.

    இத்தரச்சான்றுகளை அந்தந்த போலீஸ் நிலைய ஆய்வாளர்களிடம் மதிப்பீட்டாளர்கள் கார்த்திகேயன் மற்றும் வனிதா ஆகியோர் வழங்கினர்.

    மேலும் இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரணியில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.எஸ்.ஓ தரசான்று மற்றும் பாதுகாப்பு சுகாதாரத்திற்கான பணிட மதிப்பீடு சான்றிதழ் ஆகியவற்றை தணிக்கை அதிகாரி கார்த்திக்கேயன் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரனிடம் வழங்கினார்.

    இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். மாவட்ட அளவில் ஐ.எஸ்.ஓ தரசான்று 2வது இடத்தில் ஆரணி டவுன் போலீஸ் நிலையம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    • உலக நன்மைக்காக நடந்தது
    • உலக சாதனை சான்று வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உலக நன்மைக்காக 1,008 சங்கு முழங்கும் விழா நடைபெற்றது.

    முன்னதாக கிரிவலப்பாதையில், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மஹாகுபேர லஷ்மியாகம் மற்றும் கோ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் சோப கிருது தமிழ் புத்தாண்டு தினத்தில் நடைபெற்றது.

    1,008 சிவலிங்கத்திற்கு மஹா புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்ட சங்கை ஒரே நேரத்தில் 1,008 சிவனடியார்கள் மற்றும் சாதுக்கள் ஒன்றிணைந்து சங்கு ஒலி முழங்கும் சாதனை விழா நடைபெற்றது. முன்னதாக பரதநாட்டியம், குத்து விளக்கு ஏற்றுதல், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து ஒரே நேரத்தில் 1,008 சங்கு முழங்கிய நிகழ்வுக்கு யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை சான்று வழங்கப்பட்டது.

    • மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலத்தின் மகன் ராமகிருஷ்ணன் (வயது 22). இவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் அலறவே சத்தம் கேட்டு அவருடைய அக்காள் விஜயலட்சுமி ஓடி வந்து மின்சாரத்தை நிறுத்தினார். எனினும் ராமகிருஷ்ணன் அதே இடத்தில் துடி துடித்து இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் ஆதிமூலம் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு தொகுதியைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியம், சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை, செய்யாறு ஒன்றியம், காழியூர் ஆகிய 4 கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயி களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் ஜெ.சி.கே. சீனிவாசன், தினகரன், ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளின் பயன்பெறும் வகையில் 4 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் வெம்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கோடை வெயில் தாக்கத்தை போக்கும் வகையில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்து கிராம மக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, கிர்னி பழம், கீரைக்காய் உள்ளிட்ட வைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பார்த்திபன், சுந்தரேசன், கருணாநிதி, தி.மு.க. நிர்வாகிகள் சிட்டிபாபு, பிரகாசம், சங்கர், பெரு மாள், ராதாகிருஷ்ணன், தயாளன், அம்பிகாபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×