4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
Published on

செய்யாறு:

செய்யாறு தொகுதியைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியம், சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை, செய்யாறு ஒன்றியம், காழியூர் ஆகிய 4 கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயி களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் ஜெ.சி.கே. சீனிவாசன், தினகரன், ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளின் பயன்பெறும் வகையில் 4 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் வெம்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கோடை வெயில் தாக்கத்தை போக்கும் வகையில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்து கிராம மக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, கிர்னி பழம், கீரைக்காய் உள்ளிட்ட வைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பார்த்திபன், சுந்தரேசன், கருணாநிதி, தி.மு.க. நிர்வாகிகள் சிட்டிபாபு, பிரகாசம், சங்கர், பெரு மாள், ராதாகிருஷ்ணன், தயாளன், அம்பிகாபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com