என் மலர்
உள்ளூர் செய்திகள்

5 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
- தணிக்கை அதிகாரி வழங்கினார்
- நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அறிவுறுத்தலின்படி போலீஸ் நிலையத்தை பொதுமக்களுக்கு மிகவும் பயன்பெறும் வகையில் வழக்குகளை விரைவாக கையாளுதல் உட்பட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் சிறப்பாக பராமரித்து போலீஸ் நிலையத்தின் தரத்தை உயர்த்தும், ஐ.எஸ்.ஓ. தரச்சான்று எனப்படும் பணியிட மதிப்பீடானது திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கிராமியம், தானிப்பாடி, போளூர் மற்றும் ஆரணி நகரம் ஆகிய 4 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றானது வழங்கப்பட்டள்ளது.
இத்தரச்சான்றுகளை அந்தந்த போலீஸ் நிலைய ஆய்வாளர்களிடம் மதிப்பீட்டாளர்கள் கார்த்திகேயன் மற்றும் வனிதா ஆகியோர் வழங்கினர்.
மேலும் இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரணியில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.எஸ்.ஓ தரசான்று மற்றும் பாதுகாப்பு சுகாதாரத்திற்கான பணிட மதிப்பீடு சான்றிதழ் ஆகியவற்றை தணிக்கை அதிகாரி கார்த்திக்கேயன் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரனிடம் வழங்கினார்.
இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். மாவட்ட அளவில் ஐ.எஸ்.ஓ தரசான்று 2வது இடத்தில் ஆரணி டவுன் போலீஸ் நிலையம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.






