ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீபம்

ஏராளமான பக்தர்கள் தரிசனம் அம்மன் திருவீதி உலா நடந்தது
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் நாராய ணமங்கலம் கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று தமிழ் புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்தனர். கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

இதேபோல் கண்ணமங்கலம் அருகே அழகுசேனை சூளைமேடு பகுதியில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் 23ம்ஆண்டாக லட்சதீபம், ஆஞ்சநேயர் வீதி உலா நடைபெற்றது. இரவில் நாடகம் நடைபெற்றது.

மேலும் 5புத்தூரில் அடங்கிய சின்னப் புத்தூரில் மாரியம்மன் கோவலில் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது.

மாலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இரவில் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்காரம் செய்து அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com