என் மலர்
திருவண்ணாமலை
- ஆரணியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பரபரப்பு
- அதிகாரிகள் இருக்கையில் இல்லாததால் ஆத்திரம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சாரணர்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுப்பிரமணி ரஞ்சித் இவர்கள் கோ-51 என்ற நெல் ரகத்தை விவசாயம் செய்து அரசுக்கு கொடுப்பதற்கு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பதிவு ெய்து வைத்துள்ளனர்.
நேற்று ஆரணி அருகே உள்ள அரியப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வர சுப்பிரமணி மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்தில் அறுவடை செய்த 115 மூட்டை நெல்லை டிராக்டர் மூலம் நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் மேலும் பணியில் இருந்த அதிகாரிகள் நெல் எடை போடுவதற்கு ஒரு கிலோ நெல்லிற்கு ஒரு ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று விவசாயிகளிடம் கேட்டுள்ளனர். இதனை கேட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து டிராக்டரில் நெல் மூட்டைகளுடன் ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். உதவி கலெக்டர் அலுவலகம் வளாகம் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் இருக்கையில் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அதிகாரிகள் வரும் வரையில் காத்திருக்க போவதாக தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே நில அளவை அலுவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஏழுமலை, திருவண் ணாமலை கோட்ட கிளை தலை வர் தரணிவாசன், ஆரணி கோட்டை கிளை தலைவர் அசோக்குமார், செய்யாறு கோட்ட கிளை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன் வரவேற்றார். மாநில தலைவர் ராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
இதில் நில அளவை கள அலுவ லர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவ டிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குன ரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், நவீன நில அளவை உடனடியாக வழங்கிட கோரியும், ஒப்பந்த சர்வேயருக்கு அரசு வேலை வழங்கிட கோரியும், காலி பணியிடங்களை நிரப்பக் கோரி யும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சையத்ஜலால், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணா துரை, நெடுஞ்சாலை பணியா ளர் சங்க மாநில செயலாளர் மகாதேவன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சந்துரு உள்பட நில அளவை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கன்னி வேல் நன்றி கூறினார்.
- பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- 22-ந்தேதி காலை துரியோதனன் படுகளம் நடக்கிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கி திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று 17-ந்தேதி கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட தபசு மரத்தில் அர்ச்சுனன் வேடமணிந்து நாடக நடிகர் உச்சியில் தபசு செய்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் வேண்டினார்.
இந்த பாசுபதாஸ்திரம் மகாபாரத போரில் கர்ணனை வெல்ல அஸ்திரம் ஆகும். இந்த தபசு மரத்தை சுற்றிவந்து திருமணமான பெண்கள் குழந்தைகள் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணம் வேண்டியும் சுற்றி வந்து வணங்கினர்.
முடிவில் குறவன் குறத்தி வேடத்தில் ஈசன் வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினார். வருகிற 22-ந்தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது.
மறுநாள் 23-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.
- 80 மனுக்கள் பெறப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு முகாம் உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் தனியார் பஸ் வசதி வேண்டி, இலவச வீட்டு மனை பட்டா, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, சொட்டு நீர்ப்பாசனம் அனுமதி, ஆரணி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மற்றும் முறைகேடு புகார் உள்ளிட்ட 80 புகார் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் ஆரணி ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு பாலில் தண்ணீர் கலந்து முறைகேட்டில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கொடுக்கும் நடவடிக்கையில் தற்போதைய அ.தி.மு.க. தலைவர் ஈடுபடுவதாகவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக இயக்குநர்கள் யேசுராஜன், குப்பன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
- மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சந்திரசேகர், கீழ்பெண்ணாத்தூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வேல்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்நேசன், வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி, கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயது முதலே நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படிக்க நல்ல புத்தகங்கள் தான் மாணவர்களின் நல் வழிகாட்டி மேலும் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பது நிறுத்த வேண்டும். ஆகியவற்றை நிறுத்தி மாணவர்களுக்கு நல்வழி காட்ட பெற்றோர்கள் முன் வர வேண்டும்.
படிப்பு தான் மாணவர்கள் எதிர்காலம் ஆகவே படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஒரு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று பேசினார்.
- வருகிற 21-ந்தேதி நடக்கிறது
- கோரிக்கைகளை தெரிவித்து பயன் அடையுமாறு கலெக்டர் அறிவுரை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.
எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
- ஜெயிலில் அடைப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 24). இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 8 வயதுடைய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், வேலுவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் வழங்க பரிந்துரை செய்தார். அதன் பின்னர் வேலுவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- கால்வாய் பணியின்போது சிக்கியது
- வனத்துறையினர் காட்டில் விட்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கடந்த 5-மாத காலமாக கீழ்பென்னாத்தூரில் சாலையோர கால்வாய் அகலப்படுத்தும் பணிகள் பகுதிவாரியாக நடைபெற்று வருகின்றன.
நேற்று மதியம் 2 மணி அளவில் பஸ் நிலையம் அருகே உள்ள மளிகை கடைபகுதியின் முன்பாக கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது சுமார் 10 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று காணப்பட்டது. உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டு, கீழ் பென்னாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து தீயணைப்பு மற்றும்மீட்பு பணி வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து பாம்பை உயிருடன் பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பை வனத்துறையினர் காட்டில் கொண்டு போய் விட்டனர்.
- டிரைவராக செயல்பட்டவர்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கொள்ளையில் தொடர்புடைய அரியானாவை சேர்ந்த தஸ்லிம்கான் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
இவர் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க சென்ற போது அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டியவர் என்று கூறப்படுகிறது.
- சிறப்பு யாகபூஜைகள் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் கிராமத்தில் கமண்டல நதி தென்கரையில் கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது.
இதைமுன்னிட்டு 15-ம்தேதி மாலை முதல் காலயாகபூஜைகளும், 16-ம்தேதி காலை இரண்டாம் கால யாகபூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் அருகே பக்தர்கள் வசதிக்காக முன்னாள் கவுன்சிலர் சசிகுமார் என்பவர் ரூ.3 லட்சம் மதிப்பில் அன்னதான மண்டபம் திறக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 10 மணி அளவில் பொன்னியம்மன் திருவீதி உலாவும் வாணவேடிக்கையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- 100-க்கும் மேற்பட்டோர் கைது
- மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்
போளூர்:
போளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம். கே.விஷ்ணு பிரசாத் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், கொம்மனந்தல் சுரேஷ் சேத்துப்பட்டு முனிரத்தினம், சத்யன், ஆரணி ராமலிங்கம், தெள்ளார் தனஞ்செழியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
செங்கம்:
செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அங்காளபரமேஸ்வரி, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீமுனிஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபாடு செய்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு கோவில் வளாகங்களில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம் உட்பட ஹோமங்கள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து மகாபூர்ணாகதி, யாக பூஜைகளை சிவாச்சாரி யார்கள் செய்தனர். இதை தொடர்ந்து திருக்கோவில்களின் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தாழையூத்து கிராம மக்கள் உட்பட செங்கம் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






