என் மலர்
நீங்கள் தேடியது "Dharna condemning the officer"
- ஆரணியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பரபரப்பு
- அதிகாரிகள் இருக்கையில் இல்லாததால் ஆத்திரம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சாரணர்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுப்பிரமணி ரஞ்சித் இவர்கள் கோ-51 என்ற நெல் ரகத்தை விவசாயம் செய்து அரசுக்கு கொடுப்பதற்கு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பதிவு ெய்து வைத்துள்ளனர்.
நேற்று ஆரணி அருகே உள்ள அரியப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வர சுப்பிரமணி மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்தில் அறுவடை செய்த 115 மூட்டை நெல்லை டிராக்டர் மூலம் நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் மேலும் பணியில் இருந்த அதிகாரிகள் நெல் எடை போடுவதற்கு ஒரு கிலோ நெல்லிற்கு ஒரு ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று விவசாயிகளிடம் கேட்டுள்ளனர். இதனை கேட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து டிராக்டரில் நெல் மூட்டைகளுடன் ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். உதவி கலெக்டர் அலுவலகம் வளாகம் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் இருக்கையில் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அதிகாரிகள் வரும் வரையில் காத்திருக்க போவதாக தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






